சமாதானத்தை குழப்ப திலீபனை சாகடித்த பிரபாகரன்

 

அது இந்திய அமைதிபடை இலங்கையில் கால்பதித்த நேரம், சிங்கள தாக்குதலிலிருந்து தம்மை காக்க இந்தியா வந்ததை ஈழதமிழர்கள் கொண்டாடிகொண்டிருந்த நேரம், ஜெயவர்த்தனே இறங்கிவந்து தமிழருக்கு தனி மாகாணம் கொடுக்கலாம் என முதன்முதலாக சொல்லி இருந்த நேரம். அதற்கு மேலும் இழுத்தால் நிலமை இன்றைய சிரியா அளவிற்கு செல்லலாம் என்பதால் எல்லா குழுக்களும் இணக்கபாட்டுக்கு வந்திருந்த நேரம். புலிகளும் ராஜிவ் ஒப்புகொண்ட மாதாந்திர 50 லட்சத்தை வாங்கிகொண்டு எப்படியும் ஜெயவர்த்தனேவுக்கும் ராஜிவிற்கும் பிணக்கினை ஏற்படுத்தி மறுபடியும் சண்டை தொடங்கலாம் என எதிர்பார்த்த நேரம்.

(“சமாதானத்தை குழப்ப திலீபனை சாகடித்த பிரபாகரன்” தொடர்ந்து வாசிக்க…)

உலகத் தமிழ் நாடக அரங்கு

உலகத் தமிழ் அரங்க ஆராய்ச்சி மையம்

தமிழ் நாடக அரங்கு இன்று உலகம் தழுவிய ஒன்றாய் பரந்து பட்ட ஒரு தளத்தில் உரையாடலுக்கான காத்திரமான செல்நெறிகளையும், பல்வேறு விதமான சிந்தனைப்பள்ளிகளையும்(school of thorts) கொண்டது மரபு வழி அரங்குகளயும் நவீன நாடக ஆற்றுகைகளையும் , கொண்டதே நம் தமிழ் அரங்கு.

(“உலகத் தமிழ் நாடக அரங்கு” தொடர்ந்து வாசிக்க…)

சி.வியை கைது செய் – உதய கம்மன்பில

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து சிறையில் அடைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார். கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

(“சி.வியை கைது செய் – உதய கம்மன்பில” தொடர்ந்து வாசிக்க…)

சமூக வலைத்தளங்கள் பற்றிய கணிப்பு???

எம் மண்ணில் அண்மையில் அரங்கேறிய காட்சிப்பதிவு, சமூக வலை தளத்தில் வந்ததால், சிறுமி மீதான வன்முறை சம்பவம் அம்பலமாகி, நீதிமன்ற வாசலை தட்டியது. இதுவரை காலமும் அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கை பக்கம் திரும்பிய காட்சி படுத்தல், சிறுவர் துன்புறுத்தல் பக்கம் திரும்பியது, வைத்தியர் கையில் உள்ள கத்தியும், கசாப்பு கடைகாரன் கையில் உள்ள கத்தியும் செய்யும் செயல் பற்றிய, வித்தியாச செய்தியை சொல்கிறது.

(“சமூக வலைத்தளங்கள் பற்றிய கணிப்பு???” தொடர்ந்து வாசிக்க…)

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசசேலத்தை அங்கிகரிப்பேன் – டொனால்ட் ட்ரம்ப்

தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், ஜெருசசேலத்தை, இஸ்ரேலின் தலைநகரமாக, ஐக்கிய அமெரிக்கா அங்கிகரிக்கும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசசேலத்தை அங்கிகரிப்பேன்’தெரிவித்ததாக, அவரது பிரசாரக் குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு நடைபெருமானால், ஐக்கிய அமெரிக்க கொள்கையின் பாரிய மாற்றமாக இது அமையும்.

(“இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசசேலத்தை அங்கிகரிப்பேன் – டொனால்ட் ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்களின் இலட்சியம் நிறைவேறும்வரை நாம் ஓயமாட்டோம். எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் டக்ளஸ் தேவானந்தா உரை!

எமது மக்களின் இலட்சிய கனவுகள் நிறைவேறும்வரை நாம் ஒருபோதும் ஓயப்போவதில்லை. எழுக தமிழ் கூட்டுப்பேரணியை நாம் வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றோம். தொடர்ந்தும் இதுபோன்ற எழுச்சிப் போராட்டங்களை நாம் நடத்துவோம் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எழுக தமிழ் கூட்டுப் பேரணியில் கலந்து கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

(“தமிழ் மக்களின் இலட்சியம் நிறைவேறும்வரை நாம் ஓயமாட்டோம். எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் டக்ளஸ் தேவானந்தா உரை!” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கைத் தமிழர் வாழ்வில் என்று ஒளி வரும்?

(அகிலன் கதிர்காமர்)
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், மக்கள் எதிர்பார்த்த நன்மைகளோ வளர்ச்சியோ ஏற்படவில்லை. தீர்மானங்கள் இயற்றப்படுவதும் அறிக்கைகள் வாசிக்கப்படுவதுமாக மாகாண சட்டப்பேரவை வெறும் பேச்சு மடமாகி விட்டது.

(“இலங்கைத் தமிழர் வாழ்வில் என்று ஒளி வரும்?” தொடர்ந்து வாசிக்க…)

‘எழுக தமிழ்’ நிகழ்வில்

‘எழுக தமிழ்’ நிகழ்வில் எட்டாயிரம் வரையான மக்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. சிலர் மூவாயிரம் பேர் வரையே கலந்து கொண்டார்கள் என்று சொல்கிறார்கள்.’எழுக தமிழ்’ நிகழ்வின் ஒளிப்படங்களை நுண்மாண்நுழைபுலன் கொண்டு ஆராய்ந்த போது, ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருப்பது புலப்பட்டது. ஆறாயிரத்தில் இருந்து எட்டாயிரம் வரையான மக்கள் கலந்து கொண்டார்கள் என்று சொல்வது சரியாக இருக்கும்.

(“‘எழுக தமிழ்’ நிகழ்வில்” தொடர்ந்து வாசிக்க…)

நீறு பூத்த நெருப்பை பெரும் தீ ஆக்கலாமா?

அண்மையில் வட மாகாண சபை முதல்வர் முஸ்லிம் மக்கள் சம்மந்தமாக தெரிவித்த கருத்து விசனத்தை/விமர்சனத்தை ஏற்படுத்தியதை, இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கிகை மூலம் அறியமுடிகிறது. முஸ்லிம்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டபோதும், அவர்கள் தங்களை தமிழர்களாக அடையாளம் காட்டாமல், தமது அரசியல் காரணங்களுக்காகவே தம்மை முஸ்லிம்களாக அடையாளம் காட்டுகின்றார்கள் என, வடமாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் மட்டக்களப்பில் தெரிவித்த கருத்தை, றிசாட் பதியுதீன் தலைமை வகிக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் வை எல் எஸ் ஹமீட் விடுத்த, அறிக்கை மூலம், நீறு பூத்த நெருப்பாக இருந்த, முன்னர் அரங்கேறிய பல அராஜக சம்பவங்கள், வெளிப்பட தொடங்கி மீண்டும் இன நல்லிணக்கத்தை கேள்விக்குறியாக மாற்றும் நிலை தோன்றி உள்ளது.

(“நீறு பூத்த நெருப்பை பெரும் தீ ஆக்கலாமா?” தொடர்ந்து வாசிக்க…)