பஸ் கட்டண உயர்வு: முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் கைது

பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து முதல்வர் செல்லும் பாதையில் முற்றுகைப் போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். ஊதிய உயர்வு, பணப்பலன் நிலுவை, ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்த வேலை நிறுத்தம் நீதிமன்ற தலையீட்டின் பேரில் முடிவுக்கு வந்தது.

(“பஸ் கட்டண உயர்வு: முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

மீண்டது சிங்கம்பட்டி ஜமீன் காடு: வருஷநாடு மலையும் மீட்கப்படுமா?

(கே.கே.மகேஷ்)

தமிழகத்தின் வற்றாத ஜீவநதியாக தாமிரபரணி இருக்கிறதென்றால், பொதிகை மலை உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் மிகச்சிறப்பாக பாதுகாக்கப்படுவதே காரணம். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 23,000 ஹெக்டேர் பரப்பு கொண்ட, சிங்கம்பட்டி ஜமீன் காட்டை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிப்பதற்கு தமிழக வனத்துறை முயற்சித்தது. ஆனால், அந்த முயற்சிக்கு 40 ஆண்டாகத் தடையாக இருந்தது ‘மாஞ்சோலை எஸ்டேட் டீ’ நிறுவனம். தற்போது அந்த நிறுவனத்தைச் சட்ட ரீதியாக வென்றிருக்கிறது வனத்துறை.

(“மீண்டது சிங்கம்பட்டி ஜமீன் காடு: வருஷநாடு மலையும் மீட்கப்படுமா?” தொடர்ந்து வாசிக்க…)

யார் தலைமையேற்பது? சொல்லுங்கள், முதலமைச்சரே சொல்லுங்கள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

கௌரவ முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கட்கு!

பூரண சுகத்தோடு இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

ஓர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசராக, ‘கவீரன்’ (க.வி.விக்னேஸ்வரன்) என்கிற கருத்தியலாளராக, கொழும்பு கம்பன் கழக மேடைகளில் முக்கிய பேச்சாளராக என்று, பல கட்டங்களிலும் தங்களைக் கண்டும், வாசித்தும், கேட்டும் வந்திருக்கின்றேன்.

(“யார் தலைமையேற்பது? சொல்லுங்கள், முதலமைச்சரே சொல்லுங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

கீரியிடம் பிடுங்கி நரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது

ஊவா மாகாண சபை தமிழ்க் கல்வி அமைச்சானது கீரியிடம் இருந்த பிடுங்கி நரியிடம் ​கொடுக்கப்பட்ட கதையாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார். நேற்று(24) ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் 2 வருடங்களுக்கு முன்பு பண்டாவளை நகரில் வைத்து அரச பணியாளரான தபால் ஊழியர் ஒருவரைத் தாக்கி பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் தற்போதும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், அதிபரை முழங்காலிட வைத்த சம்பவத்தின் குற்றவாளியான ஊவா மாகாண சபை முலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பதவியை எவ்வாறு செந்தில் தொண்டமானுக்கு வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் ​கேள்வி எழுப்பினார்.

(“கீரியிடம் பிடுங்கி நரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது” தொடர்ந்து வாசிக்க…)

பரிணாம வளர்ச்சி ஆய்வு குறித்து அமைச்சர் சர்ச்சை கருத்து: டார்வின் கோட்பாட்டை பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவது சரியா?

(எம்.சண்முகம்)

ரங்கில் இருந்து மனிதன் பிறந்தானா? இதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ஆராய்ச்சியாளர் டார்வின் சொன்னது தவறு’ என்று ஒரு கருத்தைச் சொல்லி சர்ச்சையில் சிக்கியுள்ளார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சத்யபால் சிங். டார்வின் தெரிவித்துள்ள பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர், இதுகுறித்து அறிவியல் ஆய்வாளர்கள் விவாதிக்க விரும்பினால், சர்வதேச அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையே ஏற்பாடு செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(“பரிணாம வளர்ச்சி ஆய்வு குறித்து அமைச்சர் சர்ச்சை கருத்து: டார்வின் கோட்பாட்டை பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவது சரியா?” தொடர்ந்து வாசிக்க…)

அரிதாகி வரும் ஐடி ஊழியர்களின் புது வீடு கனவு: சென்னையில் விற்பனை கடும் சரிவு

ஐ.டி. துறையில், வேலைவாய்ப்பு மற்றும் சம்பள உயர்வு குறைந்து வருவதால் அத்துறை ஊழியர்கள் வீடு வாங்குவதை குறைத்துள்ளனர். இதனால் சென்னையில் புதிய வீடுகள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்காவில் விசா கெடுபிடி என தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இதனால், ஐடித்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. முன்னணி ஐடி நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணிக்கு சேர்ப்பதை கணிசமாக குறைத்துள்ளன.

(“அரிதாகி வரும் ஐடி ஊழியர்களின் புது வீடு கனவு: சென்னையில் விற்பனை கடும் சரிவு” தொடர்ந்து வாசிக்க…)

போதை பொருள் கடத்துலுடனும், பாதாள உலக கும்பல்களுடனும் தொடர்புடையவர்கள் அரசாங்கத்துடன் இருக்கின்றனர்.

அமைச்சர் Mano Ganesan போதை பொருள் கடத்துலுடனும், பாதாள உலக கும்பல்களுடனும் தொடர்புடையவர்கள் அரசாங்கத்துடன் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த தடியை அவர் எப்போது எடுப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். போதை பொருள் கடத்தல், பாதாள உலககும்பல்கள்களின் தொடர்பில்லாமல் நடைபெறுவதில்லை. இரண்டுமே அரச அதிகாரத்தை பிரயோகிக்க கூடியவர்கள் அல்லது அணுக கூடியவர்களின் பின்னனி இல்லாமல் இயங்குவதில்லை.

(“போதை பொருள் கடத்துலுடனும், பாதாள உலக கும்பல்களுடனும் தொடர்புடையவர்கள் அரசாங்கத்துடன் இருக்கின்றனர்.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் வரலாறு ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்

(த.மனோகரன்)

போலி வரலாற்றில் மிதக்கும் தமிழர் அரசியல் என்ற தலைப்பில் எச்.எல்.டி.மஹிந்தபால என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம் வீரகேசரியில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை நமது சிந்தனையைத் தூண்டுவதாயுள்ளது. அத்துடன் கல்வித்துறையில், வரலாற்று ஆய்வுத்துறையில் இதுவரை நாம் விட்ட அல்லது கண்டுகொள்ளாத பலவற்றைச் சுட்டிக்காட்டுவதாயுமுள்ளது. முதலிலே பல்கலைக்கழகங்கள் கற்பிப்பதுடன் ஆய்வுகள் செய்து உண்மையை வெளிக்கொண்டுவந்து அடுத்த தலைமுறைக்கு ஆறிவூட்டவேண்டும் என்ற கருத்துடைய கூற்றைக்கவனிப்போம். ஆனால் பெரும்பாலான பல்கலைக்கழக சமூகத்தினர் அரசியல் கருத்துகளைக்கூறுவதுடன் வரலாற்று உண்மைகளை ஆராய்வதில்லை. அதுமட்டுமல்ல பக்கச்சார்பான கருத்துகளை வெளிப்படுத்தி நாட்டில் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றனர். இந்நாட்டின் சீரழிவுக்கு அதுவே காரணமுமாகின்றது.

(“தமிழர் வரலாறு ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

கடன் சுமையிலிருந்து மீண்டு வரும் இலங்கை

(பேராசிரியர் எம்.சுனில் சாந்த) (சப்ரகமுவ பல்கலைக்கழகம்)

இலங்கை சுதந்திரம் அடைந்த போது, இலங்கையின் பொருளாதாரமானது அந்நியச் செலாவணியால் அபிவிருத்தியடைந்திருந்தது. அப்போது இலங்கையின் வெளிநாட்டு இருப்புகளின் அளவு, மூன்றரை வருடங்களுக்கு நாட்டின் செலவைத் தாங்கிக் கொள்ளுமவுக்குப் போதுமானதாகவிருந்தது. குறித்த நாட்களில், வெளிநாட்டுச் சொத்து வளங்கள் உயர் மட்டத்தில் காணப்பட்டதுடன், ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதார நிலையோடும், ஆசிய வலயத்தின் இரண்டாவது பலம்பொருந்திய பொருளாதாரமாகவும் காணப்பட்டது.

(“கடன் சுமையிலிருந்து மீண்டு வரும் இலங்கை” தொடர்ந்து வாசிக்க…)

கைதாகிய முதலமைச்சர் பிணையில் விடுவிப்பு

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை முழங்காலிடச் செய்தார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மூன்று சட்டத்தரணிகளுடன் பதுளை பொலிஸில், நேற்று (23) சரணடைந்தார்.

(“கைதாகிய முதலமைச்சர் பிணையில் விடுவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)