இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் சனிக்கிழமை 5 மணி முதல் அமலுக்கு வந்ததாக அறிவித்திருக்கிறார் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி. 

பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப். நிதியுதவி: இந்தியா எச்சரிக்கை

பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டொலர் கடன் தொகைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்துள்ளது. கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சர்வதேச நிதியத்தின் நிர்வாக குழு கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

பாடசாலையின் பெயரை பாதுகாக்கும் நோக்கில் செயற்பாடு

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில்  விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 

இந்தியா-பாகிஸ்தான் போர் : ஜி7 நாடுகள் அவசர அறிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், G7 நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையில் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்தன.

மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி

கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் மின்னல் தாக்கிய இளைஞன் பலி

யாழ்ப்பாணம் – ஏழாலை கிழக்கு பகுதியில் விவசாய காணியில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் இன்று (08) நண்பகல் மின்னல் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஏழாலை கிழக்கை சேர்ந்த 39 வயதுடைய குணரட்ணம் குமரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் பிரஜைகள் 34 பேர் கைது

விசா காலாவதியாகி நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 34 பங்களாதேஷ் பிரஜைகள், வியாழக்கிழமை (08)8 அன்று  சீதுவை பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தபோது குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர்.

மாணவியின் மரணம் : சபையில் பிரதமர் ஹரிணி கொடுத்த உறுதி

கொட்டாஞ்சேனையில் தற்கொலை செய்து கொண்ட பம்பலப்பிட்டி  பாடசாலை  மாணவிக்கு நடந்த   முதல் சம்பவம்  இடம்பெற்ற போது அது முறையாக ஆராயப்படவில்லை. இந்த விடயம் குறித்து ஏன் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கவில்லை? குறித்த ஆசிரியர் தொடர்பில் ஏன்  அமைச்சுக்கு அறிவிக்கவில்லை என்பது தொடர்பில் அந்த பாடசாலையின் அதிபரிடம்  விளக்கம் கோர  அமைச்சுக்கு முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என  கல்வி அமைச்சரும்,  பிரதமருமான    ஹரிணி  அமரசூரிய தெரிவித்தார்.

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு கடூழிய சிறை

பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அரச அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை இன்று(09) விதித்துள்ளது.