வெப்பநிலை குறித்து வௌியான எச்சரிக்கை

நாளை (13) பல பகுதிகளில் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை (13) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, “எச்சரிக்கை” மட்டத்தில் இருக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

கம்பளையில் ரூ.22 கோடி கொள்ளை: மூவர் கைது

கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் கோடீஸ்வரர் வர்த்தகரிடம் 22 கோடி ரூபாயை கொள்ளையடித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை, கண்டி   குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம், கோடீஸ்வரர் வர்த்தகரின் வீட்டுக்குள் வைத்து, மே 8 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

தனிநாடு கேட்கிறது பலுசிஸ்தான்

பாகிஸ்​தானின் மிகப்​பெரிய மாகாண​மாக பலுசிஸ்​தான் உள்​ளது. ஆனால், பாகிஸ்​தான் அரசு தங்​களை புறக்​கணிப்​ப​தாக​வும், பலூச் பகு​தியை தனி நாடாக அறிவிக்க கோரி​யும் அங்​குள்ள பலூச் விடு​தலைப் படை​யினர் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

இந்​தியா – பாகிஸ்​தான் இடையே மோதல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், பலூச் மக்​களும் தங்​கள் பங்​குக்கு பாகிஸ்​தானுக்கு எதி​ராக அவ்​வப்​போது தாக்​குதல் நடத்தி வரு​கின்​றனர். சமீபத்​தில் 12 பாகிஸ்​தான் ராணுவத்​தினர் சென்ற வாக​னத்தை வெடி வைத்து தகர்த்​தனர். பலூச் மாகாண தலைநகர் குவெட்​டாவை கைப்​பற்றி விட்​ட​தாக​வும் பலூச் விடு​தலைப் படை அமைப்​பினர் அறி​வித்​து​விட்​டனர்.

அங்​குள்ள பிரபல எழுத்​தாளர் மிர் யார் பலூச்   கூறும்​போது, ‘‘பாகிஸ்​தானில் இருந்து பலுசிஸ்​தான் தனி நாடாகி விட்​டது. இதற்​கான அறி​விப்பு விரை​வில் வரும். புதிய அரசிடம் நிர்​வாகம் ஒப்​படைக்​கப்​படும். எனவே, டெல்​லி​யில் பலுசிஸ்​தான் தூதரகத்தை தொடங்க அனு​ம​திக்க வேண்​டும். ஐ.நா. பலுசிஸ்​தானுக்கு அமைதி படையை அனுப்ப வேண்​டும். தனி நாடாக பலுசிஸ்​தானை அங்​கீகரிக்க வேண்​டும்’’ என்று பகிரங்​க​மாகவே கூறி​யுள்​ளார்.

பாகிஸ்​தான் முஸ்​லிம் நாடாக இருந்​தா​லும், அதன் பலூசிஸ்​தானில் இந்​துக்​களும் சிறு​பான்​மை​யின​ராக இருக்​கின்​றனர். பாகிஸ்​தான் மக்​கள் தொகை​யில் 6 சதவீதம் மக்​கள் பலூச் பகு​தி​யில் உள்​ளனர். ஆனால், நிலப்​பரப்பு மட்​டும் 45 சதவீதம். அந்​தளவுக்கு மிகப்​பெரிய மாகாணம். தனிமங்​கள் கொட்​டிக் கிடக்​கும் இடம். இந்​துக்​களுக்கு பலுசிஸ்​தானுக்​கும் உள்ள தொடர்பை இங்​குள்ள ஹிங்​குலாஜ் அம்​மன் கோயில்​தான் உறுதி செய்​கிறது. இந்​தி​யா​வின் 54 சக்தி பீடங்​களில் ஹிங்​குலாஜ் கோயிலும் ஒன்​று.

ஹிங்​குலி என்​ப​தற்கு சிந்தி மொழி​யில் முன் நெற்றி பொட்டு அல்​லது குங்​குமம் என்று அர்த்​தம். பாகிஸ்​தானுக்கு எதி​ரான தாக்​குதலுக்கு ‘சிந்​தூர்’ என்று பிரதமர் மோடி பெயர் வைத்​துள்​ளது மிகப் பொருத்​த​மாக இருப்​பதை அறிய முடி​யும்.

இங்​குள்ள அம்​மனுக்கு செந்​தூரத்​தில்​தான் அலங்​காரம் செய்​கின்​றனர். இந்த கோயிலும் குகை​யில்​தான் அமைந்​துள்​ளது. பலுசிஸ்​தானின் லயரி தாசில் மலைப் பகு​தி​யில் கோயில் அமைந்​துள்​ளது. இயற்கை எழில் கொஞ்​சும் அந்த மலைப் பகு​தி​யில் உள்ள கோயிலுக்கு இந்​துக்​கள் ஆண்​டு​தோறும் புனித யாத்​திரை​யும் மேற்​கொள்​கின்​றனர்.

ஒவ்​வொரு ஆண்​டும் சுமார் ஒரு லட்​சம் இந்​துக்​கள் இந்​தக் கோயிலுக்கு புனித யாத்​திரை மேற்​கொள்​கின்​றனர். இந்த கோயிலை ஹிங்​லாஜ் தேவி, ஹிங்​குலா தேவி மற்​றும் நானி மந்​திர் கோயில் என்று மக்​கள் அழைக்​கின்​றனர்.

பாகிஸ்​தான் அரசின் புறக்​கணிப்​பு, சீனா​வின் கட்​டு​மானப் பணி​களால் பாதிப்பு போன்​றவற்​றால் விரக்​தி​யில் உள்ள பலுசிஸ்​தான் மக்​கள், தங்​களை தனி நாடாக அறிவிக்க கோரி போ​ராடி வரு​கின்​றனர். இந்​தியா மீதும் இந்​திய மக்​கள் மீதும் பலூச் மக்​கள் வைத்​திருக்​கும் அந்த நம்​பிக்​கை நிறைவேறு​மா என்​ப​தற்​கு ​காலம்​ பதில்​ சொல்​லும்​.


சிந்து நதி நீர் ஒப்பந்தம் இரத்து நீடிக்கிறது

தாக்குதலை நிறுத்திய இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமானதான சிந்து நதிநீர் ஒப்பந்தம் இரத்து என்ற முடிவை திரும்பப்பெறவில்லை.

ட்ரம்பின் மத்தியஸ்தத்தை நிராகரிக்கும் காங்கிரஸ்

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா முன்வந்திருக்கும் நிலையில், காஷ்மீர் பிரச்சினை 1000 ஆண்டுகால பிரச்சினை இல்லை, மாறாக அது 78 ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கியது என்று காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி தெரிவித்தார்.

’’ஊகங்களைத் தவிர்க்கவும்’’: இந்திய விமானப்படை

இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதாகவும், ஊகங்களை தவிர்க்குமாறும் இந்திய விமானப்படை ஞாயிற்றுக்கிழமை (11) தெரிவித்துள்ளது.

யாழில் நடிகர் பாஸ்கர்: மகிழ்ச்சி தருகிறது என்கிறார்

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படும் குறும்படத்தில் , யாழ்ப்பாணத்திற்கு வந்து,  யாழ்ப்பாண தமிழ் பேசி நடித்தமை மகிழ்ச்சியை தந்துள்ளது என தென்னிந்திய திரையுலக பிரபல நடிகர் எம். எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார். 

உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவி – அநுர

கொத்மலை கெரண்டியெல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

போதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

பண்டாரகம, கலனிகம பகுதியில் மதுபோதையில், பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறையில் – ஹொரணை   தனியார் பேருந்தின் சாரதி ஒருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்.

கொத்மலை விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.