ஏப்ரல் 22-ம் திகதி பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க மத்திய அரசு. தடை உத்தரவை பிறப்பித்துள்ளது
எதிர்க்கட்சிகள் சுயாதீனக் குழுக்களை உருவாக்கி வெவ்வேறு சின்னங்களின் கீழ் போட்டியிட்டாலும், அவர்கள் தங்கள் நடைமுறைகள், தத்துவம் மற்றும் நடத்தையை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்த நாட்டு மக்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க மாட்டார்கள் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கூறினார்.
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சுபம் நிறுவனத்தின் சார்பில் சிவகங்கை பயணிகளுக்கு கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமைதவிர்த்து ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வரும் கப்பல் சேவையில் இரு நாட்டு பயணிகளும் பயன் பெற்று வருகின்றனர்.
இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் கடந்த (22.04.2025)ஆம் திகதி அன்று 26 பொதுமக்கள் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (30) அன்று இடம்பெற்றது.
டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.