வடக்கு தங்கம்: விசாரிக்க உத்தரவு

மனிதாபிமான நடவடிக்கையின் போது இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்கப் பொருட்கள் அடங்கிய தங்கக் கையிருப்பு குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, இலங்கை மத்திய வங்கி, தேசிய நகை ஆணையம் மற்றும் பல அரசு நிறுவனங்களுக்கு தொடர்ச்சியான உத்தரவுகளை, திங்கட்கிழமை (05) பிறப்பித்தார்.

ஆஸ்துமா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் ஆஸ்துமா (Asthma)  நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுவாச நோய் தொடர்பான மருத்துவ நிபுணர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை 6ஆம் திகதி உலக ஆஸ்துமா தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வெப்ப அலை குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளை பாதிக்கும் கடுமையான வெப்பத்திற்கு ஆளாகாமல் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

இலங்கை – வியட்நாம் இடையில் 04 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் பல்வேறு துறைகள் சார்ந்த நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒரு இணக்கப்பாட்டு ஒப்பந்தமும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

பிரதமருக்கு எதிராக முறைப்பாடு

பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கட்சியின் ஆதரவாளர்களை தேர்தல் பிரச்சார அமைதிக் காலத்திலும் பிரச்சாரம் செய்யச் சொன்னதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியதாக எழுந்த முறைப்பாட்டை விசாரிக்குமாறு இலங்கையின் முக்கிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பான சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தெருநாய் இறைச்சி விற்பதாக சந்தேகம்

தெருநாய்களை பிடிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல், அந்த தெருநாய்களை இறைச்சியாக்கி விற்பனை செய்கின்றனரா என்ற சந்தேகம் எழுத்துள்ளது.

நான்கு வருடங்களை தீர்மானிக்கும் ஒரேயொரு புள்ளடி

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசாரம் நிறைவடைந்து, மே.6 ஆம் திகதியான இன்று (06) காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்களிப்பு நடைபெறவிருக்கின்றது. அதற்கான சகல ஏற்பாடுகளையும், தேர்தல்கள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது.

அலுப்பாந்தியடி ஆலமரம்

(Paul Prahalathan)

யாழ் நகரை அண்டி 90கள் வரைக்கும் வாழ்ந்தவர்களுக்கு அலுப்பாந்தியடி என்ற இடமும் பெயரும் ஞாபகத்தில் இருக்கும். அலுப்பாந்தி என்பதுகூட மருவிய சப்பாத்து , மேசை, கதிரை, அலவாங்கு போன்ற போர்த்துக்கீச பெயராக இருக்கலாம். ஆனாலும் அலுப்பாந்தியடி என்பது ஒரு முக்கிய இடமாக அக்காலங்களில் இருந்தது.

025 மே தின அறிக்கைதமிழர் சமூக ஜனநாயகக் கட்சி – அம்பாறைப் பிராந்தியம்

இலங்கையில் 60-65 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு புதிய ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. புதிய அரசு, பல்வேறு மாற்றங்களை நோக்கி திட்டங்களை முன்வைத்து செயல்பட்டு வருகின்றது. அந்த வரிசையில், பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதை நிறைவு செய்ய இன்னும் ஆறு (06) நாட்களே உள்ளன.இத் தேர்தலை ஒரு ஜனநாயகச் செயல்முறையாக, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி வரவேற்கின்றது.

மே தினம்: உழைப்பாளர் உரிமைப் போராட்ட தினம்

(தோழர் ஜேம்ஸ்)

இதற்கு முன்பே பல்வேறு நாடுகளில் தொழிலாளர் நலன்களை முன்னிறுத்திப பல போராட்டங்கள் நடைபெற்றன.

ஆனாலும் ஒரு அமைப்பாக ஒரு போராடும் தினத்தின் அடையாளமாக அமெரிக்காவின் ஒரு நகரில்தான் இந்த மே தினம் அடையாளப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.