நில ஆக்கிரமிப்பு தொடர்பான திரைப்படங்கள் வெளியீடு

திருகோணமலை மாவட்டத்தின் மக்கள் நில அபகரிப்புக்களை எடுத்து காட்டும் வாழ்வியலுடன் தொடர்புடைய “சம்பூர் மின் உற்பத்தி நிலையம் முதல் சக்தியற்ற வாழ்க்கை” மற்றும் “திரியாயின் ஆத்திக்காடு” என்ற இரு ஆவணத் திரைப்பட வெளியீடு திருகோணமலை ஜுப்லி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (25)  இடம்பெற்றது .

மாகாண சபைத் தேர்தல் தாமதமாகும்

மாகாண சபைத் தேர்தல்கள் சுமார் ஒரு வருடம் ஒத்திவைக்கப்படும் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் தலைவர்   ஆனந்த ரத்நாயக்கவிடம் நாம் வினவியபோது, ​​“மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இன்னும் தொடங்கப்படவில்லை” என்றார். இது தொடர்பாக இதுவரை எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.

அதிக புகை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிய CCTV கமராக்கள்

அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிந்து, குற்றவாளிகள் மீது முறையான நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸ் சிசிடிவி கமராக்களைப் பயன்படுத்துவது குறித்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள (டிஎம்டி) கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உகந்தமலை முளைத்த புத்தர் சிலை

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலை ஒன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. அதோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பம்?

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான இரண்டு மணிநேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சமூக தளத்தில் ’‘ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

தொங்கு உள்ளூராட்சி சபைகளின் எதிர்காலம்

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையை வென்ற சபைகள் மறக்கப்பட்டு எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெறாத சபைகளின் பக்கமே அரசியல் ஆர்வம் உள்ளவர்களின் கவனம் தற்போது திரும்பியுள்ளது.

’’நல்லிணக்கத்திற்கான தேநீர் – யாஜி 2025’’

இலங்கை சீனா இருநாடுகளுக்கும் இடையிலான வளமான கலாச்சார உறவுகளைக்கொண்டாடும் வகையில், “நல்லிணக்கத்திற்கான தேநீர் – யாஜி 2025” சீன-கலாச்சார விழா,மே 21, புதன்கிழமை அன்று  கொழும்பில் நடைபெற்றது.

நடிகை மாலினி பொன்சேகா காலமானார்

புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார்.
 அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலமானார். கடந்த 1968 ஆம் ஆண்டு  ‘புஞ்சி பபா’ என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையை நடிகை மாலினி பொன்சேகா தொடங்கினார்.

வாசிங்டன் செல்லும் இலங்கை பிரதிநிதிகள்

அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று வொசிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பின் பேரிலேயே குறித்த குழு வொஷிங்டனுக்கு பயணிக்கவுள்ளது.  இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது நேரடி சந்திப்பு இதுவாகும்.