மாத்தளை மாவட்டத்தில் சமகி ஜன பலவேகயவின் மூன்று தேர்தல் அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரத்தொட்ட அமைப்பாளர் ரஞ்ஜித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார். அதன்படி, மாத்தளை பிரதான அமைப்பாளர் வசந்த அலுவிஹாரே, தம்புள்ள பிரதான அமைப்பாளர் சம்பிகா விஜேரத்ன மற்றும் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் ரஞ்ஜித் அலுவிஹாரே ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அமைப்பாளர் பதவிகளில் இருந்து ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். கட்சியால் ஏற்பட்ட பல்வேறு தாமதங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், மேலும் பலர் தங்கள் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்க உள்ளதாகவும் ரஞ்ஜித் அலுவிஹாரே தெரிவித்தார்
Month: May 2025
போதைப்பொருள்: விசேட சுற்றிவளைப்பில் 475 பேர் கைது
3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைப்பு
3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இதற்கான நிகழ்வு இன்று(24) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது 08 விசேட தர தாதியர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. வரலாற்றில் அதிகளவான தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும் என அமைச்சு கூறியுள்ளது.
’உப்பு’ தொடர்பில் தகவல்
’’குஷ்’’ போதைப் பொருளுடன் நால்வர் கைது
நீர் கட்டணம் எப்போது உயர்த்தப்படும்?
வடக்கில் காணி சுவீகரிப்பு வர்த்தமானி ;வௌ்ளியன்று பேச்சு
பூவரசங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்
மாதாந்த உணவுக் கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு
பாராளுமன்றத்தின் பொது ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணம் சுமார் மூன்று மடங்கு அதிகரிப்பால் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்களுக்கான பல கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ள சூழலில், உணவுச் செலவுகளை ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் அதிகரிப்பது நியாயமற்றது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பாராளுமன்ற ஊழியர்களுக்கான மாதாந்த உணவுக் கட்டணம் இதுவரை 1000 ரூபாயாக இருந்து வருகிறது. பாராளுமன்ற அவைக் குழு எடுத்த முடிவின்படி, பொது ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணம் 3,600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.