புறா வர்த்தகர் மீது துப்பாக்கிச்சூடு: மூவர் கைது

கொட்டாஞ்சேனை புளுமெண்டல் ரயில்வேக்கு அருகில் புறாக்களை விற்பனைச் செய்யும் கடை நடத்தி வரும் 41வயதான நபரொருவர்  மீது ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூவரில், ஒருவர் துப்பாக்கித்தாரி பயணித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் என்றும் கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.  

பாராளுமன்ற ஊழியர்களின் உணவு விலையைத் திருத்த ஒப்புதல்

பாராளுமன்ற நிர்வாக தர அதிகாரிகள் மற்றும் நிர்வாகம் சாரா பணியாளர் உறுப்பினர்களுக்கான உணவுக்கான கட்டணங்களை 2025 ஜூன் 01 முதல் திருத்தியமைக்க பாராளுமன்ற அவைக் குழு முடிவு செய்துள்ளது.

இலங்கை ஏறாவூரில் ஒரே இரவில் 121 முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றது ஏன்? என்ன நடந்தது?

(ஜாஹிரா)

படக்குறிப்பு,புலிகளின் துப்பாக்கி சூட்டின் போது வயிற்றில் பாய்ந்த குண்டினால் இன்னும் அவதிப்படுவதாக ஜாஹிரா கூறுகிறார்.

(எழுதியவர்,யூ.எல். மப்றூக்)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் – இலங்கை அரசு முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்று, இலங்கை – ஏறாவூர் ‘சுஹதாக்கள் பேரவை’யின் தலைவர் எம்.எல். அப்துல் லத்தீப் கோரிக்கை விடுக்கின்றார்.

பண்டாரநாயக்கவின் பின், அவரது அடிச்சுவட்டில்

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பண்டாரநாயக்க 1959இல் கொலை செய்யப்பட்டவையானது சுதந்திரத்திற்கு பிந்தைய இலங்கையின் ஒரு தசாப்தகால பொருளாதாரக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தது.

ஆடைத் தொழில்துறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும்

இலங்கைக்கு டொலர்களை ஈட்டித் தரும் முக்கிய ஏற்றுமதித் தொழில்களில் ஒன்றான ஆடைத் தொழில் நெருக்கடியில் உள்ளது. சில தொழிற்சாலைகள் பகுதியளவில் மூடப்படுகின்றன. ஒருசில ஆடைத்தொழிற்சாலைகள் முழுமையாக மூடப்படுகின்றன. இதனால், அங்கு பணியாற்றிய பலரும் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

“ராக்கிங் வேண்டாம்” என கூறிய மாணவியை தாக்கிய மாணவன்

புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவன் வெள்ளிக்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குட்டி தேர்தல்: நடைமுறை சிக்கலில்…

நாட்டில் நடத்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பெயர்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, மாநகர சபைக்கான  ஆரம்பக் கூட்டங்களைக் கூட்டுவதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன.

நாமலின் அடுத்த வியூகம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவை எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ, அழைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய தேர்தல்களில், தஹாம் சிறிசேன பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்ற அழைக்கப்பட்டிருந்தார். 

“நோயாளர்களின் உயிருக்கு பாரிய ஆபத்து”

நாடு முழுவதும் உள்ள பல அரசு மருத்துவமனைகளில் அவசர மருத்துவ சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையால் நோயாளர்களின் உயிர்களுக்கு கடுமையான ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

சஜித் அணியில் மேலும் இருவர் இராஜினாமா

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்களில் மேலும் இருவர், அமைப்பாளர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.