யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள்  பல்கலைக்கழகத்திற்கு   முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை புதன்கிழமை (4) முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“புலமைப் பரிசில் பரீட்சை இரத்துச் செய்யப்படாது” – பிரதமர்

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை  இரத்துச் செய்யும் நோக்கம்  தற்போது கிடையாது. ஆனால்   இந்த பரீட்சையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை குறைப்பதற்கான மாற்றுத்திட்டங்கள் 2028 மற்றும்  2029 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில்  அமுல்படுத்தப்படும் என்று  பிரதமரும் கல்வி அமைச்சருமான     ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

CID இல் ஆஜரானார் தயாசிறி

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இன்று (4) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜரானார். அவர் CIDக்கு சென்றது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டாலும், விசாரணையின் குறிப்பிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை

வெள்ளவத்தையில் சோகம்: மாடியிலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

வௌ்ளவத்தையில் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை, ராம கிருஷ்ணா பிளேஸில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்தவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழ் கட்சிகளிடையே மாறும் ஆட்சிக் கூட்டமைப்பு

(சுப்ரமணிய பிரபா) 

வடமாகாணத்தில் DTNA 5 சபைகள்தான் கேட்டார்கள் கொடுக்கவில்லை இன்று 15 சபைகளை பறிகொடுக்கப்போகிறது தமிழரசு கட்சி…

அரசியல் பேரம் பேசல் என்பது எழுந்தமானமாக எதேச்சதிகாரமாக மேற்கொள்ளும் ஒரு விடயம் அல்ல ஆழமாக அடுத்து என்ன நடக்கும் என்பதை ஊகித்தறிந்து அதற்கேற்ற வகையில் நகர்வுகளை மேற்கொள்ளும் ஒரு நுண்ணிய அரசியல் செயற்பாடாகும்.

“ இந்நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் மக்கள் மத்தியில் முதலில் நாடு தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்

“ இந்நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் மக்கள் மத்தியில் முதலில் நாடு தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எமது ஆட்சிகாலத்தில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், ‘யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம் – 2025’ தலைப்பிலான கலந்துரையாடல் அரியாலை ஜே ஹொட்டலில் அண்மையில் நடைபெற்றது.

கிருஷாந்தி குமாரசாமி படு​கொலை: குற்றவாளிகளின் மனு தள்ளுபடி

கிருஷாந்தி குமாரசாமி கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஐந்து குற்றவாளிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக மேல்முறையீடு செய்ய செவ்வாய்க்கிழமை (03) மறுத்துவிட்டது.

கொரோனா: உச்சத்தை தொட்ட கேரளா

இந்தியாவில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, தற்போது 4,000ஐ நெருங்கிவிட்டது. திங்கட்கிழமை (2) நிலவரப்படி, நாட்டில் 3, 961 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சிந்து நதிநீர் நிறுத்தம்: நீர் பஞ்சத்தில் பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து,  சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால், பாகிஸ்தான் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறது.

6,000 வீரர்களின் சடலங்களை பரிமாற்ற முடிவு

மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்யாவும் உக்ரைனும் துருக்கியில் மீண்டும்,திங்கட்கிழமை (2) நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. சுமார் இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.