அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு தன்னுடைய கவலையைத் தெரித்துள்ளது.
Month: July 2025
செம்மணியில் 65 எலும்புக்கூடுகள்: சிதிலங்கள் காணப்பட்டன
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , வியாழக்கிழமை (10) மதியத்துடன் , அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ராஜிதவை கைது செய்யுமாறு உத்தரவு
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டார்.
கன்னியா – பிலியடி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
கன்னியா – பிலியடி நடன காளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணிகளை அப்பகுதி மக்களுக்கு வழங்காமல் வேறு மக்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை (11) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்
ட்ரம்பின் தீர்வை வரி: சஜித் அதிரடி அறிவிப்பு
எமது நாட்டு ஏற்றுமதிகளில் 26.4% பங்களிப்பைப் பெற்றுத் தரும் ஏற்றுமதி தலமாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. ஆடைத்துறையில் 60% ஏற்றுமதி தலமாகவும் அமெரிக்கா நாடே இருந்து வருகிறது. தீர்வை வரியை 44% இலிருந்து 30% ஆகக் குறைந்தமை நல்லதொரு விடயமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வௌ்ளிக்கிழமை (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதிய கல்வி முறை குறித்து பாடம் எடுத்தார் பிரதமர்
கோவை குண்டுவெடிப்பு: 28 ஆண்டுகளுக்கு பின் டெய்லர் ராஜா சிக்கினார்
அமெரிக்க விசா செலவு உயரும்
பால் டீயின் விலை அதிகரிப்பு
பால் டீயின் விலையை ரூ.10 அதிகரிப்பதாக அகில இலங்கை உணவகம் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யும் பால் மாவின் விலையை இறக்குமதியாளர்கள் அதிகரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.