டட்லி சிறிசேன ஹோட்டல் விவகாரம்;அமைச்சர் விளக்கம்

இந்த ஆண்டு நீர்த்தேக்கங்களில் உள்ள சட்டவிரோத கட்டமைப்புகளை அகற்றும் திட்டத்தில் பராக்கிரம சமுத்திரம் விலக்கப்பட்டதற்கு தொழிலதிபர் டட்லி சிறிசேனவுக்குச் சொந்தமான ஹோட்டல் தான் காரணம் என்ற கூற்றை விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த நிராகரித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (21)  காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்ப்பட்டுள்ளது.

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: தண்டனை பெற்ற 12 பேரும் விடுதலை

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.  இது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேருக்கு மரண தண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்த சிறப்பு நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை ரத்து செய்கிறது. 

சபாத் இல்லத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத் இல்லத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்குமாறு அரசைக் கோரி கண்டன ஆர்ப்பாட்டமொன்று அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களால் திங்கட்கிழமை (21) அன்று பிரதேச சபை முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.

கிரகரி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக தடை

நுவரெலியாவின் கிரகரி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.அதிக காற்று மற்றும் கடுமையான மோசமான வானிலை காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக நுவரெலியாவின் கிரகரி ஏரியில் படகு சவாரி மற்றும் ஸ்வான் படகு சவாரி திங்கட்கிழமை (21) முதல் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது,  

வட்டுக்கோட்டையில் மோதல் : பொலிஸார் துப்பாக்கிச் சூடு

வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இன்று (20) இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 2026 முதல் ஈ-என்ஐசி அறிமுகம்

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் (இ-என்ஐசி) ஏப்ரல் 2026க்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று டிஜிட்டல் பொருளாதாரத் துணை அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். டிஜிட்டல் ஐடி அமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு, ஐடி செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் 2012 இல் தொடங்கப்பட்டதாக அவர் கூறினார்.

பாடசாலை நேரம் நீட்டிக்கப்பட்டது ஏன்-பிரதமர் விளக்கம்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலின் போது பேசிய பிரதமர் அமரசூரிய, ஒரு பாடத்தின் காலம் 45 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 

செப்டெம்பர் அமர்வில் தமிழர் நிலைப்பாடு

(லக்ஸ்மன்)

செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுக்குத் தமிழர்கள் தயாராக வேண்டிய நேரமாக இதனைக்கொள்ள வேண்டும்.

கொழும்பு அரசியலில் அதிரடி எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்தில் மாற்றம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மற்றொரு எதிர்க்கட்சி எம்.பி.க்கு வழங்குவது குறித்து ரகசிய பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. சமீப நாட்களில் கொழும்பில் பல இடங்களில் இது குறித்த விவாதங்கள் நடைபெற்றன.