இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் உரிமைகள் (ரத்துசெய்தல்) சட்டமூல சான்றிதழை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 18 ஆம் எண் ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டமாக அமலுக்கு வரும். ஜனாதிபதியின் உரிமைகள் (ரத்துசெய்தல்) சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் 150 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
Month: September 2025
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஆப்பு: 151 ஆதரவு, 01 எதிர்ப்பு
’’இலங்கையில் இருந்து இலவங்கம் இனி வாங்க மாட்டோம்’’
பொதுத் தேர்தலில் வெற்றிக்கு உரிமை கோரிய நோர்வே பிரதமர்
நோர்வேயின் தொழிலாளர் கட்சி பிரதமர் ஜூனோஸ் கார் டுடு திங்கட்கிழமை (08) சட்டசபைத் தேர்தல்களில் வெற்றிக்கு உரிமை கோரியுள்ளார். இத்தேர்தலில் குடியேற்றத்துக்கெதிரான பிரபலமான முன்னணிக் கட்சியின் ஆதரவும் எப்போதுமில்லாதளவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 28 சதவீத வாக்குகளுடன் தொழிலாளர் கட்சி முன்னிலைக்கு வந்த நிலையில், மற்றைய நான்கு இடது சாரிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் டுடு பதவியில் தொடர முடியும்.
அஷ்ரபின் மரணம் தூசு தட்டப்படுமா?
புதியதோர் அரசியல் மாற்றம்?
ஆமி சுரங்க கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹோமாகம ஹந்தயா என்பவரின் துப்பாக்கிதாரியாக செயல்பட்ட நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் ஆர்மி சுரங்க என்றழைக்கப்படும் முன்னாள் இராணுவ வீரரான புத்திக லக்மால் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி சலுகை ரத்து சட்டமூலம்;நாளை விவாதம்
ஜனாதிபதியின் உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்தை நாளை விவாதிக்க பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற அலுவல் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நாளை காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை விவாதம் நடைபெறும்.