மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட எம்.பிக்கள் பலர் ராஜினாமா செய்வர்

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமகி ஜன பலவேகயவின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – தமிழர் ஒற்றுமைக்காக சுயநல அரசியலைக் கடந்து செல்ல வேண்டும்

(ராஜ் சிவநாதன்)

தமிழர் ஒற்றுமை மிக அவசியமான இந்த நேரத்தில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அரசியல் சூழல் இன்னும் பிளவுபட்ட நிலையிலேயே உள்ளது. பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் கட்சிகள், சில தெற்கத்திய ஜனநாயக குழுக்களுடன் இணைந்து மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்தவும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் ஒருமனதாக கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) அந்தக் கூட்டுப் பணிகளில் இருந்து விலகி நிற்கிறது.

பெற்றோருக்கு எதிராக பிள்ளைகள் முறைப்பாடளிக்கலாம்?

பெற்றோர், பிள்ளைகளுக்கு தண்டனை வழங்கினால் அதற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்க முடியும் என்ற சட்டம் கலாசாரத்துக்கு முரணானது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

டிரம்ப்புக்கு கிடைக்காத நோபல் பரிசு : வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு

உலகளவில் நடைபெற்றுவந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் உள்பட 8-க்கும் மேற்பட்ட போர்களைத் தடுத்து நிறுத்தியதாக தொடர்ந்து கூறி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், வேறு ஒருவருக்கு பரிசு வழங்கப்பட்டதால் அவர் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மின்சாரக் கட்டண திருத்தம்: 14 ஆம் திகதி இறுதி முடிவு

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 14ஆம் திகதி  அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை 6.8% உயர்த்த இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக அதன் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் கூறினார்.

இலங்கை கல்வித் திட்டத்தில் மாற்றம் – பிரதமர்

மாணவர்களுக்கு சட்டக் கல்வி தொடர்பான கல்வியை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.  தரம் 6 முதல் 8 வரையான பாடவிதானங்களில், குடியுரிமை பாடத்தில் சட்டக் கல்வி தொடர்பான பகுதியை இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை

1989ம் ஆண்டின் மையப்பகுதி என நினைக்கின்றேன். அருமைத் தலைவர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முதலில் ஆதரித்து விட்டு பின் எதிர்த்த பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இயக்கம் இந்திய அமைதிப்படையை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த காலம் அது.

’’ஈஸ்டர் சதிகாரர் அடையாளம் காணப்பட்டார்’’

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த முக்கிய சதிகாரர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) பாராளுமன்ற உறுப்பினர் நிஜாம் காரியப்பர் தெரிவித்தார்.

தேசிய மகளிர் ஆணைக்குழு ஸ்தாபிப்பு

தேசிய மகளிர் ஆணைக்குழு இலங்கையின் சுயாதீன ஆணையங்களில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.