32 புறாக்கள் திருட்டு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேசிய மிருகக்காட்சிசாலையின் உதவி பணிப்பாளர் எச்.ஏ.டி.பி. சமன்மாலி, தெஹிவளை பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம்,  கடந்த 4 ஆம் திகதி அதிகாலையில் இந்தத் திருட்டு நடந்துள்ளது.

விக்கிபீடியாவுக்கு போட்டியாக வருகிறது குரோக்பீடியா

விக்​கிபீடி​யா​வுக்கு போட்​டி​யாக குரோக்​பீடியா என்ற தகவல் களஞ்​சி​யத்தை அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்க் விரை​வில் அறி​முகம் செய்​கிறார். கடந்த 2001-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்ட விக்​கிபீடியா உலகின் தகவல் களஞ்​சி​ய​மாக செயல்​படு​கிறது. விக்​கிமீடியா அறக்​கட்​டளை என்ற தொண்டு நிறு​வனம் விக்​கிபீடி​யாவை நிர்​வகித்து வரு​கிறது. இந்த தளம் சுமார் 300-க்​கும் மேற்​பட்ட மொழிகளில் தகவல்​களை வழங்கி வரு​கிறது. சுமார் 6.5 கோடிக்​கும் மேற்​பட்ட கட்​டுரைகள் இடம்​பெற்​றுள்​ளன.

தையிட்டிக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் – வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸவிகாரைக்கு எதிராக திங்கட்கிழமை (6) அன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

விமல் ​வீரவன்ச வரவில்லை

முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, தங்காலை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவுக்கு திங்கட்கிழமை (06) காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.  ஆனால், அவர் இன்றையதினம் ஆஜராகவில்லை என்றும் மற்றுமொரு திகதியை கோரியுள்ளதாகவும் அறியமுடிகின்றது. 

தெமட்டகொடையில் ஆயுதங்கள் மீட்பு

தெமட்டகொட ரயில் நிலையத்திற்குப் பின்னால் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 9மிமீ துப்பாக்கி, டி-56 துப்பாக்கிக்கான ஒரு மகசின் மற்றும் இரண்டு நேரடி டி-56 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

திடீரென மூடப்பட்ட பொலிஸ் நிலையம் திறப்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH) வளாகத்திற்குள் அமைந்துள்ள பொலிஸ் நிலையம், உத்தியோகபூர்வ உத்தரவின் பேரில் திடீரென மூடப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

முட்டை விலை குறைந்துள்ளது

முட்டை விலை குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு வெள்ளை முட்டை ரூ. 28க்கும், சிவப்பு முட்டை ரூ. 30க்கும் விற்கப்படுகிறது.

மூன்று விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு

2025ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, நமது உடலை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான வெவ்வேறு நுண்ணுயிரிகளிலிருந்து நோயெதிர்ப்பு அமைப்பு நம்மை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதைக் கண்டுபிடித்ததற்காக, அமெரிக்கர்கள் மற்றும் ஜப்பானியர்கள் என மூவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பிரமிட் திட்டத்திற்குள் சிக்கி முழு கிராமம்… நடுவீதியில் திண்டாட்டம்

அம்பாறை மாவட்டம் தமன பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பன்னல்கம கிராம மக்கள் அனைவரும் பிரமிட் திட்டத்திற்குள் சிக்கி கடனாளிகளாகிவிட்டனர்.

பிரதேச அபிவிருத்தி சபைகள்

சிறிமா அரசாங்கம் முன்னெடுத்த முக்கியமான திட்டங்களில் பிரதேச அபிவிருத்திச் சபைகள் என்ற முயற்சி முக்கியமானது. இந்தத் முயற்சி நல்ல பலன்களைக் கொடுத்தது.