முழு மதுவிலக்கு: அதுவே எமது இலக்கு

மதுவிலக்கு தொடர்பான விவாதங்கள் சமூக அளவிலிருந்து அரசியல் மட்டத்துக்கு வந்திருக்கும் சூழல் இது. மது அருந்துவதால் ஏற்படும் உடல், மனநல பாதிப்புகள், பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. எனினும், நாளைமுதல் தொடவே மாட்டேன் என்று சத்தியம் செய்வோர். இன்று மட்டும் என கூறி மீண்டும் ஆரம்பித்துவிடுகின்றனர். 

நெடுந்தீவில் எரிபொருள் நிலையம்

வரலாற்றில் முதல் முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் எட்டப்பட்டதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும் சபைத் தலைவருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியுடை  வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அணித் தலைவரை தூக்கியது இந்தியா

ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான ஒரு நாள் கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​கும் இந்​திய அணிக்கு ஷுப்​மன் கில் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். கேப்​டன் பதவியி​லிருந்து ரோஹித் சர்மா விடுவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அவர் அணி​யில் தொடர்​கிறார்.

கொட்டாஞ்சேனை மேற்கு தலைவராக ஆனந்தகுமார் நியமனம்

தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் ஒன்றான பிரஜா சக்தி திட்டத்தின் கொட்டாஞ்சேனை மேற்கு தொகுதியின்  தலைவராக, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் எஸ்.ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவினால், அக்டோபர் 02 ஆம் திகதி வழங்கப்பட்டது. 

ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி

வவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (05) அன்று ஆர்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

விமலுக்கு அழைப்பாணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை தங்காலை பொலிஸ் நிலையத்தில் திங்கள்கிழமை (6) ஆஜராகுமாறு அழைப்பாணைஅனுப்பப்பட்டுள்ளது. “பெலியத்த சனா” என்று அடையாளம் காணப்பட்ட ஒரு நபரைப் பற்றி அவர் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீப்பந்த போராட்டம்

அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு எதிரான தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நேற்று (03) இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.   அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களினூடாக வங்கி தனியார் மயப்படுத்தலை நோக்கி செல்லவுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினார்.

மின்சாரக் கட்டணம் 6.8 சதவீதத்தால் உயர்வு?

மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் உயர்த்துவது தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இந்த மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக வெளியிடப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனமும் கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம்  திருப்பி கையளிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.