மன்னாரில் சுகாதாரம் அற்ற உணவகங்களுக்கு சீல்

மன்னார் நகர சபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த  உணவகம்,வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம் ஒன்றுமாக இவ்வாரம் மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

செட்டிகுளத்தில் குண்டுகள்… கட்டுநாயகவில் மூவர் கைது

செட்டிகுளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான குண்டுகள் குறித்து பொலிஸா் விசாரணைகள் தொடங்கியதைத் தொடர்ந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று தமிழ் பிரஜைகள்  இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.

போதைவஸ்திற்கு எதிராக…. ’’நாளையிலிருந்து முழு நாடுமே ஒன்றாக’’

தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப் பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன், “முழு நாடுமே ஒன்றாக” என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்படும். இந்த தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி நடைப்பெறும் என தேசிய செயற்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின் கீழ் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கை, மேலும் விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக ஜனவரி 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான், புதன்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார். 

செவ்வந்திக்கு நூல் கொடுத்த பெண் சட்டத்தரணிக்கு தடுப்புக்காவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

30,000 ஊழியர்களை பணிநீக்க முடிவு

அமேசான் நிறுவனம் 30,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளது. ஒட்டுமொத்த நிறுவனச் செலவுகளை குறைக்கவும், கொரோனா காலத்தில் அதிகப்படியான ஆன்லைன் தேவை காரணமாக கூடுதலாக நியமித்த பணியாளர்களை குறைக்கவும் இம்முடிவு எடுக்கப்படுவதாக அமேசான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு அமேசான் நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய பணிநீக்கம் இதுவாகும்.

இலக்க தகடற்ற காரில் ஹெரோயின் கடத்தியவர் கைது

யாழ்ப்பாணத்தில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற ஒருவர் திங்கட்கிழமை (27) இரவு கைது செய்யப்பட்டார். யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 11 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெலிகம விவகாரம்: உதவிய மூவருக்கும் விளக்கமறியல்

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர (SJB) சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை, வியாழக்கிழமை (30)   விளக்கமறியலில் வைக்க மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்க, செவ்வாய்க்கிழமை (28) உத்தரவிட்டார்.

வடக்கில் GovPay வழியாக அபராதம் செலுத்தலாம்

அரசாங்க டிஜிட்டல் கட்டணத் தளமான (GovPay) மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை  கிளிநொச்சி  மாவட்ட செயலக  திறன்விருத்தி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (28)   ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

கொழும்பு -7 இல், நான்கு புதிய நீதிமன்றங்களை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய ​அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.