தேசிய புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்

தேசிய புலனாய்வு பிரிவின்  புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட,  ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் தனது கடமைகளை, செவ்வாய்க்கிழமை (28) பொறுப்பேற்றுள்ளார். பாதுகாப்புச் செயலாளர்  ஓய்வு  பெற்ற  எயார்  வைஸ்  மார்ஷல்  சம்பத்  துய்யகொந்தாவிடம்  இருந்து  தமது  நியமனக்  கடிதத்தை மேஜர்  ஜெனரல்  நியங்கொட  திங்கட்கிழமை (27)   பெற்றுக்கொண்டார்.

விஜய் வழங்கிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பிய பெண்

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்வில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. இந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இதையடுத்து, நடிகரும் தவெக தலைவருமான விஜய் மிகுந்த வேதனையுடன், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கினார்.

ஒரு பாடகனின் மரணத்துக்காக அசாம் அழுது புரள்கிறது.

மூன்று நாள்களாக அந்த மாநிலத்தில் வாழ்க்கை நிலைகுத்திக் கிடக்கிறது. கடைகள் திறக்கவில்லை. வீதிகளில் அவரது பாடலைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

போதைப்பொருளை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைவோம்

போதைப்பொருள் அச்சுறுத்தல் இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள்  மற்றும்  முதியவர்கள் என அனைவரின் வாழ்க்கையையும் அச்சுறுத்தும் ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இது ஒரு சமூக-பொருளாதார பேரழிவாக மாறியிருப்பதை அவதானிக்கலாம். 

திருமணங்கள், பிறப்புகளில் கடுமையான சரிவு

இலங்கையில் திருமணங்கள், நேரடி பிறப்புகள் மற்றும் ஒட்டுமொத்த மக்கள்தொகை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சரிவு பதிவாகியுள்ளது என மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் துறையின் புதிதாக வெளியிடப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சாக்கேணிக்கான பாதுகாப்பான படகு பாதை பயணம் ஆரம்பம்

கிண்ணியா மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு மிகவும் அவசியமான தேவையாக இருந்த, குறிஞ்சாக்கேணி கடல் நீர்ப்பரப்பில் பயணிப்பதற்கான படகுப்பாதையான “கங்கை” என்ற பெயரிடப்பட்ட பாரிய படகு பாதையின் பயணம்,பிரதி அமைச்சர்அருண் ஹேமச்சந்ராவால்  திங்கட்கிழமை (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஐக்கிய மக்கள் சக்தி

கூட்டு எதிர்க்கட்சி கூட்டணியான “மக ஜன ஹந்த” (மக்களின் குரல்) தொடங்குவதை அறிவிக்கும் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கலந்து கொள்ளவில்லை. பங்கேற்கும் எதிர்க்கட்சிகளின் பட்டியலில் SJB இடம்பெற்றிருந்தாலும், அக்கட்சியின் பிரதிநிதிகள் யாரும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட செய்தி

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியத் திட்டமும் வாக்களிக்கும் பொறிமுறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அஸ்வெசும தரவு: உலக வங்கி பிரதிநிதிகள் அதிரடி

“அஸ்வெசும” சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும்  தெரிவித்தனர்.

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல் போர் நிறுத்த ஒப்பந்தம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முன்னிலையில், தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (26) அன்று கையெழுத்தானது.