தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தின் முதல் வருடத்திற்குள் இலங்கை பல்வேறு நாடுகளுடன் 70 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 20 தெற்காசிய நாடுகள், 19 கிழக்கு ஆசிய நாடுகள், 15 ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள், நான்கு மத்திய கிழக்கு நாடுகள், நான்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் நான்கு கரீபியன் பிராந்திய நாடுகளுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Month: November 2025
200 ரூபாவை எதிர்த்தவர்களின் கொடும்பாவி எரிப்பு
ரூபாய் 200 சம்பள உயர்வும் சஜித்தும்
ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அரசுக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது.
அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் வைக்கப்பட்டது…?

திருகோணமலை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை,அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் முயற்சி, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் தலையீட்டை அடுத்து பொலிஸாரினால் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது. புத்தர் சிலையும் அகற்றப்பட்டது. அந்த புத்தர் சிலை, திங்கட்கிழமை (17) பிற்பகர் 1,30 மணியளவில் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது.
