போதைப்பொருளுடன் ஐவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் என ஐவரே யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 2 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒரு ஆணும், 2 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒரு பெண்ணும், 80 மில்லி கிராம் ஹெரோயினுடன் மூன்று ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

’கரூர் நெரிசலுக்கு தனிநபர் காரணம் அல்ல’

கரூர் நெரிசலுக்கு அந்த தனிநபர் மட்டுமே காரணம் அல்ல. நாம அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கு இதில் ஒரு பங்கு இருக்கிறது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அஜித் சமீபத்திய அளித்த பேட்டியில்  மேலும் குறிப்பிடுகையில்,

தமிழகத்தில் இலங்கைப் பெண் உட்பட்ட நான்கு பெண்கள் மரணம்

தமிழ் நாட்டில் எண்ணூர் அருகே உள்ள கடலில் இலங்கை பெண் உட்பட்ட நான்கு பெண்கள் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று ஏற்பட்ட நிலையில், சம்பவத்தில் 17 முதல் 30 வயதுக்குட்பட்ட 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம்?

எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார். லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவால் குறைத்திருந்தாலும், அதன் பயன் நுகர்வோருக்குச் சென்றடையாது என்றார்.

இன்று முதல் இதற்கும் காசு

கைப்பிடிகளுடன் கூடிய பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.  இதற்கமைய, இனிவரும் காலங்களில் பொருட்களை விற்பனை செய்யும் போது, ஷொப்பிங் பைகள் போன்ற கைப்பிடி கொண்ட பொலிதீன் பைகளுக்கு ஒரு விலையை அறவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பு 7 இல் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து எதிர்வரும் சில நாட்களில் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தமது சில உடைமைகளை அந்த வீட்டில் இருந்து தற்போது வெளியேற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.