கண்டி- நுவரெலியா பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவி்த்துள்ளனர் கெரன்டியல பகுதியிலுள்ள கற்பாறைகள் சரியும் அபாயம் கானப்ப்படுவதாள் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Month: November 2025
திருகோணமலை புத்தர்: பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை
திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த 15 ஆம் திகதி அன்று புதிதாக அமைத்த பெளத்த பிக்கு மற்றும் அவருடன் உடன் இருந்தவர்களுக்கு எதிர்வரும் ஜனவரி 14 ந் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி எம்.என்.எம்.சம்சுடீன் புதன்கிழமை(26) அன்று அழைப்பாணை விடுத்துள்ளார்.
ஹெலிகாப்டரில் வந்த A/L பரீட்சை விடைத்தாள்கள்
நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு கொண்டுவரப்பட்டது . காலநிலை மாற்றம் காரணமாக, வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு மையத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் இலங்கை விமானப்படையினரால் இன்று இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
தத்தளிக்கிறது நுவரெலியா

மத்திய மலைநாட்டின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், நுவரெலியாவின் கந்தபொல பகுதியில் உள்ள பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான சாலையில் உள்ள கந்தபொல கோட்லோஜ் சந்தி முற்றிலுமாக நீரில் மூழ்கியதால், சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, மேலும் அப்பகுதியின் தாழ்வான பகுதிகளில் காய்கறி சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
நான் கிரிக்கெட்டில் சாதிக்க அப்பாவும் அண்ணனும் தான் காரணம்
தமிழ் இனத்தின் இறைவன் மேதகுக்கு சபையில் வாழ்த்து
தமிழ் இனத்தின் இறைவன் மேதகு பிரபாகரனுக்கு இந்த உயரிய சபையில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என கூறிய தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட எம்.பியான துரைராசா ரவிகரன், “ஆழக் கடல் எங்கும், சோழ மகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று, தமிழீழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று” என்ற பாடல் வரிகளையும் குறிப்பிட்டார்.
பல் துலக்கும் பிரஷை கண்டுபிடிச்சது யார்…?
ஹொங்கொங் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து

ஹொங்கொங்கில் பல உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோபுரங்களிலிருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை வெளியேறுவதை காணொளிகள் முலம் காட்டுகின்றன, அங்கு பலர் சிக்கியிருப்பதாகவும் நம்பப்படுகிறது. கட்டிடங்களின் வெளிப்புறத்தில் உள்ள மூங்கில் சாரக்கட்டு வழியாக தீ பரவியதாக நம்பப்படுகிறது,

