அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி

கொழும்பு கங்காராமய விஹாரையில் புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்களின் கண்காட்சியைத் திறந்து வைத்ததற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05)  காலை 8.30 மணியளவில் குளவி  கூடு கலைந்து மாணவர்கள்  குளவி கொட்டுக்குள்ளாகியத்தில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும்  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை புனித வளனார் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது

திருகோணமலை புனித வளனார் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது, இன்னும் சில தமிழ் பாடசாலைகள் தனது இறுதி மூச்சில்!

இன்று எமது மண்ணின் மிகவும் பழைய பாடசாலைகளில் ஒன்றான புனித வளனார் என்ற பாடசாலை முற்றிலுமாக மூடப்பட்டு இருக்கிறது, போதியளவு மாணவர்கள் இல்லாத காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

டலாக் குடி மகனின் அனுபவம்

டெல்லியில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் இளம் சுற்றுலாப் பயணி ஒருவர்,
தனது குடும்பத்துடன் ஒரு வார விடுமுறைக்காக லடாக் வந்திருந்தார்.

அங்கு அவருக்குக் கிடைத்த டிரைவர் சுமார் 28 வயதுடைய இளைஞர்.
அவருக்கு வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர்.

கிளிநொச்சியில் கரிநாள் கவனயீர்ப்பு

இலங்கையின் 78ஆவது சுதந்திர நாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி புதன்கிழமை (04) அன்று  கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி  இடம்பெற்றது.

’’இலங்கையை கட்டியெழுப்புவோம்’’

78 ஆவது தேசிய சுதந்திர தின தேசிய வைபவம், சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் மிகவும் எளிமையான முறையில் பெப்ரவரி 4ஆம் திகதியன்று நடத்தப்பட்டது. அதில், ஜனாதிபதி ஆற்றிய உரையின் முழு விபரம்…

எப்ஸ்டீன் பிரச்சினை : சோம்ஸ்கியை முன்வைத்து…முழுமையான பதிவு

எப்ஸ்டீன் பிரச்சினையை மிகுந்த உணர்ச்சிவசத்துடன் தன்வயப்படுத்திக் கொண்டு எழுதப்படும் நிறையப் பதிவுகளைப் பார்க்க முடிகிறது.
எப்ஸ்டீன் கோப்புகளில் பெயர் குறிப்பிடப்படும் அனைத்துத் தரப்பினரும் பீடபைல்கள் எனும் உணர்வு தரும் சித்திரம் இது. இது மிகத்தவறான ஒரு மனநிலை. எப்ஸ்டீனது பாலுறவு வக்கிர-கிரிமினல் நடத்தைக்கு அப்பால், இஸ்ரேலுக்கு ஆதரவாக உலக அளவில் லாபி செய்யும் அரசியல் இலக்கும் அவனுக்கு இருந்திருக்கிறது.

புனிதம் என்பது…..

வாஷிங்டன் DC-யில் குழந்தைகளுக்கான ஒரு இல்லத்தை (DC Toddler Home) அன்னை தெரசாவும், ஹிலாரி கிளிண்டனும் இணைந்து தொடங்கினார்கள். இந்த இல்லம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த நிலையில், 2012-ஆம் ஆண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி, சத்தமே இல்லாமல் நிரந்தரமாக மூடப்பட்டது.

விசாரணைக்கு ஆஜரானார் ஷிரந்தி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷ சற்று முன்னர் கொழும்பு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆிராகியுள்ளார். ​

FCID யில் ஆஜரான நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ,  இன்று செவ்வாய்க்கிழமை (03) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்று முன்னர்  ஆஜராகியுள்ளார்.