எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து: உயர்நீதிமன்றம் வியாக்கியானம்

அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகிறேன் என சபாநாயகர் பாராளுமன்றத்தில் வௌ்ளிக்கிழமை (06) அன்று அறிவித்தார். .

பணி நிறுத்தம் செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் சத்தியாக்கிரகம்

சாமி மலை பகுதியில் உள்ள கவரவலை தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் பணி நிறுத்தம் செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் எட்டு பேர் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றப் போவது யார்?

சர்வதேச கிரிக்கெட் சபையின் 10ஆவது இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் சனிக்கிழமை (07) நடைபெறவுள்ள பாகிஸ்தான், நெதர்லாந்துக்கிடையேயான போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறையின் மோசமான நிலை

இலங்கையில் 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே சேவையில் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல்: இந்தியா பதில்

இந்திய பிரஜைகளால் கடலில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகங்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவை நிராகரித்து இலங்கை தனியாக நடக்க முடியாது

இலங்கை கடந்த சில தசாப்தங்களில் எதிர்கொண்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியின் போது, ​​இந்தியா வழங்கிய கடன் வசதிகள், எரிபொருள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நாடு முற்றிலும் நிலையற்றதாக மாறுவதைத் தடுத்த ஓர் அடிப்படை காரணியாக இருந்தன.

டில்வின் சில்வா தலைமையில் புதுடெல்லிக்கு விஜயம்

இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் (ICCR) அழைப்பின் பேரில், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான ஒரு குழு, வியாழக்கிழமை (05)  காலை இந்தியாவின் புதுடெல்லிக்கு புறப்பட்டது.

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்

நாட்டின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க வியாழக்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

தொழுநோய் விழிப்புணர்வு வீதி நாடகம்

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிற்குட்பட்ட ஹிஜ்ரா சந்தை பகுதியில், பொதுமக்களிடையே தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகமொன்று செவ்வாய்க்கிழமை  (03) அரங்கேற்றப்பட்டது

சித்தாண்டி கிராமத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

மட்டக்களப்பு, செங்கலடி பொது சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்கள் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக வெள்ளதில் மூழ்கியிருந்தது. இந்நிலையில் சித்தாண்டி – 2, சித்தாண்டி – 3, சித்தாண்டி – 4 ஆகிய பகுதியில் என்றுமில்லாதவாறு டெங்கு தாக்கத்தின் அதிகரிப்பு காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக குறித்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவித்தார்.