சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கடும் மழை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள அறிவிப்பின்படி நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நில்தண்டஹின்ன, மதுரட்ட, ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்கும் பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல, கந்தகட்டிய ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சொத்துகள் அரசுடைமை

சட்டவிரோத செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் விபரங்களை பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) வெளிப்படுத்தினார். 

’’பொல்கஸ்ஸோவிட்ட டிலா’’ வுக்கு 90 நாட்கள் தடுத்து வைப்பு

அக்குரெகொட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் இரட்டைப் படுகொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு செல்ல உதவியதாக கருதப்படும் “பொல்கஸ்ஸோவிட்ட டிலா” என அழைக்கப்படும் 28 வயதுடைய சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.

புலம்பெயர் தமிழர் எதிர்ப்பு: நாமலின் உரை கேம்பிறிட்ஜ் யூனியனில் ரத்து

கேம்பிறிட்ஜ் யூனியனில் இடம்பெறவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் உரையானது ஐக்கிய இராச்சியத்திலுள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களின் கடும் எதிர்ப்பால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்துக்கான நாமலின் இம்மாத இறுதி விஜயத்தில் ஒக்ஸ்போர்ட் யூனியன், கேம்பிறிஜ் யூனியனில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.

“AI வசதிகளை இலங்கை ஆராய்ந்து வருகிறது”

எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (17) பகல் எதிர்ப்புப் பேரணி ஒன்றில் ஈடுபட்டனர்.

புத்தளம் ஊடான புகையிர சேவைகள் மீண்டும் ஆரம்பம்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட புத்தளம் மார்க்கத்தின் ஊடான புகையிர சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய, புத்தளம் புகையிர மார்க்கம் இன்று முதல் முழுமையாக திறக்கப்படவுள்ளதாக புகையிர திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னதாக சிலாபம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் இன்றைய தினம் முதல் புத்தளம் வரை ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்தியா – பாகிஸ்தான் போட்டி ; 15 ஜெட் விமானங்கள் தரையிறக்கம்

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியைக் பார்பதற்காக, 15 விசேட தனியார் ஜெட் விமானங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள பெருமளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.   

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டு மத்திய அமைச்சர் சௌத்ரி சாலிக் ஹுசைன் (Chaudhry Salik Hussain) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரை, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திங்கட்கிழமை (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.