இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் திங்கட்கிழமை (16) அதிகாலை, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதிக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்போது உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் இரண்டை கைப்பற்றி இந்திய மீனவர்கள் 25 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மைலடி மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Month: February 2026
நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகும் சட்டத்தரணிகள்
நாளைய தினம் அனைத்து வழக்கு நடவடிக்கைகளிலிருந்தும் விலகுவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. பத்தரமுல்ல, அக்குரேகொடவில் ஒரு சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்திற்கு பிறகு, 14 ஆண்டுகளின் பின்னர் சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் நேற்று அவசர கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
’ஹஷிஷ்’ கடத்திய இருவர் கைது
இலங்கை கடற்படை, ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய நடவடிக்கையின் முக்கிய பங்காளியாக, முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு மேற்கொண்ட தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகளின் விளைவாக, மன்னாரின் தெற்கு கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 02 பொதிகளை கொண்டு சென்ற 02 சந்தேக நபர்களையும், 01 ஒரு டிங்கி படகும் சனிக்கிழமை (14) அன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
’’இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும்’’
மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்
13.56% ஆல் அதிகரிக்கும் மின் கட்டணம்
மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக இந்த மின்சாரக் கட்டணத் திருத்தக் கோரிக்கையை இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ளது.
சாப்புச் சட்டத்தை மீறினால் சட்டம் பாயும்
பங்களாதேஷ் தேசியவாதக் கட்சிக்கு வெற்றி
பங்களாதேஷில் பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வௌ்ளிக்கிழமை (13) உள்ளூர் நேரப்படி காலை 4 மணியளவில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி 185 இடங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் அறுதிப் பெருபான்மையைப் பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் எம்.பி திஸ்ஸ விதாரண காலமானார்
முன்னாள் அமைச்சரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான திஸ்ஸ விதாரண காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 92 ஆகும். இலங்கையின் இடதுசாரி அரசியல் இயக்கத்தில் சிரேஷ்ட அரசியல்வாதியான இவர், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராக நீண்டகாலமாக இருந்த இவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பல முக்கிய அமைச்சர் பதவிகளில் பணியாற்றியுள்ளதுடன், அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் மற்றும் தேசிய நல்லிணக்க முயற்சிகளில் பெறும்பங்காற்றியுள்ளார்.
