ஆசியாவின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலமாக இலங்கை உருவெடுத்தது ஏன்?

ஆசியாவின் மிகவும் உற்சாகமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கை அமைதியாக உருமாறியுள்ளது. பொன்னிற கடற்கரைகள், பனிமூட்டமான மலைநாடுகள், பழமையான நகரங்கள் மற்றும் வனவிலங்குகள் நிறைந்த தேசிய பூங்காக்கள் என, ஒரு சிறிய பயணத்தில் வேறெந்த நாட்டிலும் காண முடியாத பன்முகத்தன்மையை இந்தத் தீவு வழங்குகிறது. பயணிகள் இப்போது இலங்கையை வெறும் ஒரு இடமாக மட்டும் பார்க்காமல், வணிகமயமாகிப்போன பிற நாடுகளுக்கு மாற்றாகத் தீவிரமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

வாய்மொழி துஷ்பிரயோகம்: கட்டளையை திருத்த கோரிக்கை

சபாமண்டபத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அல்லது கூற்றுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை திருத்துமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநயாகரிடம் வியாழக்கிழமை (05)  அன்று கோரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் மூலம், ஒரு வருடத்திற்குள் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு 70% க்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கி முடிப்பு

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09)  முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக,  அஞ்சல்  மா அதிபர் ருவன் சத்குமார  அறிவித்துள்ளார்.

இலங்கைக்கு விடுக்கப்பட்ட ’செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை

இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் கடும் மின்னல் தாக்கம் தொடர்பான ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம் இன்று விடுத்துள்ளது. 

அவசரகால நிலை நீடிப்பு : தீர்மானம் நிறைவேறியது

பொது அவசரகால நிலையை நீடிப்பது தொடர்பான தீர்மானம் 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.  குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும்  அளிக்கப்பட்டன.  குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 106 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய இருவர் மாத்திரம் அதற்கு எதிராக வாக்களித்தனர்.

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள அதிகரிப்பு 2027ஆம் ஆண்டு வழங்கப்படும் வரையில் அரச ஊழியர்களை எதுவித மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெள்ளிக்கிழமை (06) வலியுறுத்தியுள்ளார்.

“ இந்தியாவுடன் விளையாடுங்க இல்லைனா” பாகிஸ்தானுக்கு இலங்கை அதிரடி

2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இலங்கை கிரிக்கெட் சபை அவசர கடிதம் எழுதியுள்ளது. வரும் பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெறவுள்ளது.

கெஹெலியவின் மூத்த மகள் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்ல,இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவ ரீதியான மற்றும் ரகசிய திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்க மக்கள் வெளியேற வேண்டும் என பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவு கவனம் பெற்றிருக்கிறது.