அதிகரித்தது மின்சாரக் கட்டணம்

இலங்கையில் மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றத்தின் படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் குறைந்த மின்சாரத்தை நுகர்வோருக்கு சலுகைகளும், அதிக மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு கட்டண அதிகரிப்பும் அமலுக்கு வரவுள்ளன.

முதல் அமைச்சர் ஜோசப் விஜய்

(தோழர் ஜேம்ஸ்)

ஒரு வழியாக விஜய் முதல் அமைச்சர் ஆவது உறுதியாகி உள்ளது.

உண்மையில் தேர்தல் நடந்து 108 உறுபினர்களை வஜய் பெற்ற உடனேயே முதல் அமைச்சர் விஜய என்பது முடிந்த முடிவாகி விட்டது.

இந்த சில நாட்கள் இழுபறி தேவையற்றது.

பதுளையில் கடும் மழை ; மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம்

பதுளை மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பசறை, ஹாலி-எல, லுணுகலை, வெலிமடை, ஊவா பரணகம, பண்டாரவளை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பகுதிகளில் நிலைமை மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை – வியட்நாம் இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகள் சார்ந்த 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) பரிமாறிக்கொள்ளும் நிகழ்வு, இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.

ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam), கொழும்பு பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள ஹோ சி மின் உருவச்சிலைக்கு இன்று (08) முற்பகல் மலரஞ்சலி செலுத்தினார்.

விஜய்க்கு மற்றுமொரு கட்சி ஆதரவு : அதிகரிக்கும் எண்ணிக்கை

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தநிலையில், தற்போது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.  தவெகவிற்கான ஆதரவுக் கடிதம் அக்கட்சியின் நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமாரிடம் வழங்கப்பட்டுள்ளது.

அரவிந்தவின் வீட்டில் இருந்தே கபில சந்திரசேன சடலமாக மீட்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி

(தோழர் ஜேம்ஸ்)

மாற்றம் என்ற பெயரில் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு கிடைத்த தோல்வியின் இன்னொரு அங்கமாக எனக்குள் உணர்வை ஏற்படுத்திய தமிழ் நாட்டுத் தேர்தல் முடிவுகள்.

தமிழகத்தின் புதிய அரசியல் திசையும் 2026 களமும்

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களமல்ல; அது அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் கட்டமைப்பில் ஏற்படப்போகும் ஒரு பெரும் பரிணாம வளர்ச்சியின் அடையாளமாகும். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளின் நிழலில் வளர்ந்த தமிழகம், இன்று ஒரு புதிய தலைமுறை அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: இழுபறியில் ரஜினிகாந்தின் தலையீடு

தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில், எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை (118 தொகுதிகள்) கிடைக்காததால், அடுத்த முதல்வர் யார் என்பதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.