இலங்கையில் 1980 நடுப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த ஜேர்.ஆர் ஜெயவர்தன தனது தேர்தல் பிரசாரத்துக்கு ஒரு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை இஸ்ரேல் பிரதிநிதிகளிடம் கோரியதாக இராஜந்திர கேபிளொன்று வெளிப்படுத்தியதாக தவையர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்நிதி அளிக்கப்பட்டதா என இஸ்ரேலிய வெளிநாட்டமைச்சு அண்மையில் வெளிப்படுத்திய இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தவில்லை.