யாழிலிருந்து கொழும்பு நோக்கி விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

“தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும்” எனும் தொனிப்பொருளில், இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய சைக்கிள் பயணத்தை இன்று காலை ஆரம்பித்தார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இருந்து காலை 7.30 மணியளவில், யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி கொடியசைத்து இந்தப் பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.

Leave a Reply