சிகரெட் மற்றும் மதுபானம் மீதான வரியைக் ‘கர்மவரி’ என்றே கூற வேண்டும் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 160 ரூபாய் பெறுமதியான சிகரெட் ஒன்றுக்கு 109 ரூபாய் வரியும், 3,700 ரூபாய் மதுபான போத்தல் ஒன்றுக்கு 2,200 ரூபாய் வரியும் அறவிடப்படும் நிலையில், இலங்கையில் பெண்கள் சிகரெட் பயன்படுத்தும் வீதம் உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.