பெருந்தோட்ட மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்று கோதுமை மாவிலிருந்து செய்யப்படும் ரொட்டியாகும். நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவால் ஏற்கனவே நசுங்கிப் போயிருக்கும் சாதாரண மக்களின் வயிற்றில், மீண்டும் ஒருமுறை ஓங்கி அடித்திருக்கிறது இந்த விலைவாசி உயர்வு.