1998 செப்டம்பர் 29.
பலாலி விமான நிலையத்தில் இருந்து ரத்மலானை நோக்கி லயன் ஏர் 602 விமானம் புறப்பட்டது.
அந்த Antonov An-24 விமானத்தில் 48 பயணிகளும் ஏழு பணியாளர்களும் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
விமானம் புறப்பட்ட சுமார் பத்து நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த 55 பேரையும் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
