திபெத்திய பீடபூமிக்குக் கீழே அமைந்துள்ள நேபாளத்தில், பேரிடர் தயார்படுத்தல் தொடர்பில் ஒரு பெரும் குருட்டுப் புள்ளி காணப்படுகிறது. ஆற்றின் மேற்பகுதியில் ஏற்படும் பேரிடரே கீழ்ப்பகுதியிலும் பேரிடராக மாறுகிறது. எவ்வாறாயினும், நேபாளத்தின் வெள்ளத் தயார்படுத்தல் நடவடிக்கைகள் பெரும்பாலும் இரண்டு போட்டே கோசிகளும் (Bhote Kosis), கர்வாலியும் அல்லது அருணும் நேபாளத்திற்கு உள்ளே நுழைந்த பின்னரே தொடங்குகின்றன.
