நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாகாணங்களைச் சேர்ந்த மொத்தம் 38 பாடசாலைகள் இன்று (21) மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, மத்திய மாகாணத்தில் 35 பாடசாலைகளும், சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களில் தலா ஒரு பாடசாலையும் இன்று இயங்காது.