தமிழ்நாடு அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த இரண்டு தொகுதிகளிலுமே ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்று, தனது சட்டமன்ற பலத்தை 107-லிருந்து 109 ஆக உயர்த்தியுள்ளது.