வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள்

(க. அகரன்)

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தால் போல், என்ற பழமொழியொன்றின் அர்த்தத்தை மீள் நினைவுக்கு கொண்டு வருவதாக, வடபகுதியில் சிறுபான்மையினரின் நிலைமை காணப்படுகின்றது. அரசியல் தீர்வு என்ற செயற்பாட்டை, தமிழ் அரசியல்வாதிகள் முன்கொண்டு செல்லும் போது, அது தமிழர்களின் வாழ்வியல் நிலைபேற்றையும் அதனுடன் சார்ந்த நிலத்தொடர்பையும் காரணமாக வைத்து, அழுத்தங்களைப் பிரயோகிக்க கூடியதாகவே அமைய வேண்டும்.

(“வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை – இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது

(எம்.எஸ்.எம். ஐயூப்)
ஜூலை மாதத்துக்குள் இலங்கையின் இனப் பிரச்சினையின் வரலாற்றில், திருப்பு முனைகளாகக் கருதப்பட வேண்டிய இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி தொடக்கம், சுமார் ஒரு வார காலமாக நாட்டின் பல பகுதிகளில், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்கள் அதில் ஒன்றாகும். (“இலங்கை – இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி: கூடியது செயலணி

நீண்டகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக பின்னடைவுக்கு உள்ளாகியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி, நேற்று (30) பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி தலைமையில், முதல் முறையாக ஒன்றுகூடியது. (“வடக்கு, கிழக்கு அபிவிருத்தி: கூடியது செயலணி” தொடர்ந்து வாசிக்க…)

அனந்தி விவகாரம் – சபை அமர்வை ஈ.பி.டி.பி புறக்கணித்தது!

அரசியலில் பெண்களின் வகிபங்கு அரிதாகி இருக்கும் எமது நாட்டில் அரசியல் செயற்பாடுகளில் முன்னின்று செயற்படும் ஒருசில பெண்கள் மீது அவதூறுகளை பூசி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவமானப்படுத்துவதுடன் அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதானது ஒரு அநாகரிகமான செயற்பாடாகும். இவ்வாறான செயற்பாடுகள் சபையில் கண்டிக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ் மாநகர சபை அமர்வில் கோரியது.

(“அனந்தி விவகாரம் – சபை அமர்வை ஈ.பி.டி.பி புறக்கணித்தது!” தொடர்ந்து வாசிக்க…)

பூச்சியத்தை நோக்கிச் செல்லும் இராச்சியம்

(காரை துர்க்கா)
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக, ஜனாதிபதியில் நம்பிக்கை இல்லை; பொருளாதார அபிவிருத்தியால் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது; ஜனாதிபதி செயலணியின் அமைப்பு உருவாக்கம் வேடிக்கை பொருந்தியதாக உள்ளது. அதில் ஒரு பொருட்டாக, நான் இணைந்து கொள்வது தேவையற்றது: இப்படியான பல விடயங்களைச் சுட்டிக்காட்டி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு அண்மையில் கடிதம் அனுப்பி உள்ளார்.

(“பூச்சியத்தை நோக்கிச் செல்லும் இராச்சியம்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் சீனா நேரடி முதலீடு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக, மேலும் 146 ​மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்ய, சீனா விருப்பம் தெரிவித்துள்ளதென, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

(“இலங்கையில் சீனா நேரடி முதலீடு” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி: கூடியது செயலணி

நீண்டகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக பின்னடைவுக்கு உள்ளாகியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி, நேற்று (30) பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி தலைமையில், முதல் முறையாக ஒன்றுகூடியது.

(“வடக்கு, கிழக்கு அபிவிருத்தி: கூடியது செயலணி” தொடர்ந்து வாசிக்க…)

எங்கே செல்லுகிறது இந்தப் பாதை?

(Jeeva Kumaran)

இலங்கையில் தீண்டாமை எதிர்ப்பு போராட்டத்தில் மாவிட்டபுர கந்தசாமி ஆலய தேர் எரியூட்டப்பட்டது கறையூட்டப்பட்ட சரித்திரம். சுமார் 1½ மாதங்களுக்கு முன்னால் வரணியில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் கோயிலின் தேரை JCB இயந்திரம் கொண்டு இழுத்துள்ளார்கள் கோயிலின் நிர்வாகத்தினர்.

(“எங்கே செல்லுகிறது இந்தப் பாதை?” தொடர்ந்து வாசிக்க…)

நல்லது நடக்கட்டும்

(தங்கவேல் மரகதமுத்து)

வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டோருக்கான நினைவுக்கூட்டத்தை ரெலோவினர் யாழ்ப்பாணத்தில் நடத்தியிருக்கினம். இதில விடுதலைப்புலிகளின் சார்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் துளசி, ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் பின்னாள் வடிவமான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் வரதராஜப்பெருமாள், ரெலோ செல்வம் அடைக்கலநாதன், சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் எனப் பலரும் கலந்து கொண்டிருக்கினம்.

(“நல்லது நடக்கட்டும்” தொடர்ந்து வாசிக்க…)

கியூபாவிற்கான பயண அனுபவங்களும் கியூபாவின் உள்ளக நிலமைகளும் கலந்துரையாடல்

ஆக்க பூர்வ மற்றும் சிந்தனை மையம் ஒழுங்கு செய்த கியூவிற்கான பயண அனுபவங்கள் மற்றும் கியூபாவின் உள் கள நிலைமைகள் பற்றிய அனுபவக் கலந்துரையாடல் ரொறன்ரோ கனடாவில் நேற்று நடைபெற்றது. கனடா கியூப நட்புறக் களத்தின் பிரநிதிகளும் இலங்கையிற்கான பிரநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பரிமாறினார். கியூபா தொடர்ந்தும் பிடல் காஸரோ காட்டிய வழியல் சுய சார்புடைய சோசலிச கொள்கையுடன் உறுதியாக தன்னை நிலை நிறுத்தி முன்னேறிக் கொண்டிருப்பதும் இதற்கு பெரும் தடையாக இருக்கும் அமெரிக்காகா அதன் நேச நாடுகள் விதிக்கும்பொருளாதார தடைகளும் இன்னபிற மறைமுக முதலாளித்து நாடுகளின் இடைஞ்சல்கள் பற்றியும் கருத்துரை வழங்கப்பட்டது .

(“கியூபாவிற்கான பயண அனுபவங்களும் கியூபாவின் உள்ளக நிலமைகளும் கலந்துரையாடல்” தொடர்ந்து வாசிக்க…)