சுத்தம் பேணப்படாத காரணத்தால் 5 வருட சிறை

மன்னார் சாவற்கட்டு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு  மன்னார் நீதவான் நீதிமன்றம் நேற்று (05) ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் குறித்த இருவரும் பணியாற்றிய உணவகத்துக்கு 83,000  ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

மன்னார் நகர சபை பொது சுகாதார  பரிசோதகரினால் குறித்த உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது,

தலையுறை பயன்படுத்தாமை, மருத்துவ அனுமதி பெறாமை, உணவுகளை ஒழுங்கற்ற முறையில் களஞ்சியப்படுத்தியமை, கழிவுநீர் தொட்டியை உரிய முறையில் பேணாமை, சுத்தம் பேணப்படாமை போன்ற ஒன்பது குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு  நேற்று (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உணவகத்தில் முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் அதே நேரம் உணவகத்துக்கு 83,000 ரூபா தண்டப் பணமும் விதிக்கப்பட்டது.

கடவுச்சீட்டு விவகாரம்: மூவருக்கும் பிணை

துபாயில் தலைமறைவாகியிருக்கும், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினருமான கெஹெல் பத்ரா பத்மேவுக்கு கடவுச்சீட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சாரதியின் பெயரில் காணி வாங்கிய முன்னாள் அமைச்சர்?

பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையகத்தை அண்மித்துள்ள நிலம், முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும், அவர் அதை தனது ஓட்டுநர் பெயரில் வாங்கியதாகவும் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதியை சந்தித்தார் ரிச்சர்ட் மார்லஸ்

இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின்  வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் பாராட்டியது.மேலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் செவ்வாய்கிழமை (03) அன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

கலாநிதி திலக் சியம்பலாபிட்டியவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இலங்கை மின்சார சபையின் (CEB) புதிய தலைவராக பேராசிரியர் KTM உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.பேராசிரியர் ஹேமபால எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.  அவர் ஒரு புகழ்பெற்ற கல்வியாளரும் என்பதுடன், முன்னர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையில் பேராசிரியர் மற்றும் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பதவிகளை வகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மாணவி பாலியல் துன்புறுத்தல்: ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

பட்டதாரிகள் திருமலையில் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் திங்கட்கிழமை (02) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லிம் பெண் பிரதிநிதி

யாழ். மாநகர சபையில் தனக்குக் கிடைத்த  3  (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி வழங்கியுள்ளது. 

நாமலின் அடுத்த வியூகம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவை எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ, அழைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய தேர்தல்களில், தஹாம் சிறிசேன பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்ற அழைக்கப்பட்டிருந்தார். 

அதிக புகை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிய CCTV கமராக்கள்

அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிந்து, குற்றவாளிகள் மீது முறையான நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸ் சிசிடிவி கமராக்களைப் பயன்படுத்துவது குறித்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள (டிஎம்டி) கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.