அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பால் அமெரிக்காவில் திரையிடப்படும் இந்திய படங்களுக்கு டிக்கெட் கட்டணம் உயரும் என்று கூறப்படுகிறது
Category: Uncategorised
இலங்கையில் நடைபெற்ற கலவரங்கள் கொல்லப்பட்டவர்கள் பற்றி விபரம்
(Varatharasa Pasupathi)
ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஒவ்வொரு தலைவர்களும் அந்தந்த காலகட்டங்களில் தமிழ் கட்சிகள் என்ற பெயர்களிள் இயங்கிய கட்சிகளை தங்கள் கைகளுக்குள் வழைத்து போட்டுக்கொண்டு .பின்னர் அதே கட்சிகளை அமைப்புக்களை தங்களை எதிர்ப்பது போல் நாடகம் ஆடச்செய்து 1956 – 2009 வரை நடந்த மனிதப்படுகொலைகள்.
இலங்கையின் வட பகுதியில் கொழுத்தும் வெயில்
இலங்கை மீதான வரியை நிறுத்தி வைத்தார் டிரம்ப்
அச்சத்தை ஏற்படுத்தும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
உலகின் ஒவ்வொரு நாட்டிலும் கொலைகள் நடக்கின்றன. இது நாகரீகம் தொடங்கிய காலத்திலிருந்து நடந்து வருகிறது. நாகரிகத்தின் தொடக்கத்திலும், இடைக்காலம் வரையிலும், கொலைதான் உலகில் மிகவும் பொதுவான குற்றமாக இருந்தது. நமது நாட்டை பொறுத்தவரையில் ஒவ்வொரு நாளும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை எப்படியாவது ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெறுகிறது.
அசோக விக்ரமசிங்க கைது
பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக விக்ரமசிங்கவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். கதிர்காமத்தில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடு தொடர்பில் ஆவணங்களைத் தயாரித்தக் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
”பல ஊழல்களில் அதிகாரிகளுக்குத் தொடர்பு”
“இலஞ்ச , ஊழல் ஒழிப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க மாட்டோம்” – ஜனாதிபதி அநுர
காதலி கூட்டு வன்புணர்வு: ஏழு பேர் கைது
பதினைந்து வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவன் உட்பட ஏழு பேர் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியுடன் வந்த பாடசாலை மாணவியின் பெற்றோர் பொலிஸில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டு, சில மணி நேரங்களுக்குள் ஏழு சந்தேக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார்தெரிவிக்கின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் பதினைந்து வயதான பாடசாலை மாணவி, மருத்துவ பரிசோதனைக்காக ஹோமாகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பாடசாலை மாணவி, தனது காதலன் என்று கூறிக்கொண்ட பாடசாலை மாணவனை சந்திக்க வீட்டிற்குச் சென்றிருந்தாள்.
தான் ஒரு டியூஷன் வகுப்பில் கலந்து கொள்வதாகக் கூறிவிட்டு, அந்த அந்த மாணவனை சந்திக்க வந்துள்ளார். அந்த நேரத்தில், சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவர், சிறுமியை ஹோமகமவின் மாகம்மன பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவரது நண்பர் ஒருவர் வசித்து வந்தார். அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதன்படி, காலை ஒன்பது மணி முதல் மாலை மூன்று மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள், பாதிக்கப்பட்ட சிறுமி ஹோமாகமவின் மாகம்மன பகுதியில் உள்ள மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரது சந்தேகத்திற்குரிய பாடசாலை காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச்சூட்டில் இருவர் மரணம் : வேன் எரிக்கப்பட்டது
மாத்தறை – தெவுந்த, சிங்காசன வீதியில் நேற்று (21) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிக்காரர்கள், T-56 மற்றும் 9 மில்லிமீட்டர் வகை ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், T-56 ஆயுதத்திற்கான 39 வெற்று தோட்டாக்கள், 2 தோட்டாக்கள், மற்றும் 9 மில்லிமீட்டர் ஆயுதத்திற்கான 2 வெற்று தோட்டாக்கள் மற்றும் 2 தோட்டாக்கள் ஆகியவை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிக்காரர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் வேன், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிளை வீதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதிலிருந்து, T-56 ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு மெகசின் மற்றும்T-56 வெற்று தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் தெவிநுவர சிங்காசன வீதியை சேர்ந்த யோமேஷ் நதிஷான் மற்றும் பசிந்து தாருக என்ற 28 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் நீதவான் விசாரணை, மாத்தறை மேலதிக நீதவான் மாலன் சிரான் ஜயசூரிய அவர்களால் இன்று (22) அதிகாலையில் நடத்தப்பட்டது.