“மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்க வேண்டும்” – இலங்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது.

ஈரான்-இஸ்ரேல் மோதல்: சபை ஒத்திவைக்கப்பட்டது

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை முன்மொழியவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இல்லாததால், இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் திடீரென முடிவுக்கு வந்தன. பாராமன்ற உறுப்பினர் நிஜாம் காரியப்பர் பிரேரணையை முன்மொழியத் தொடங்கியதை அடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய ஈரான்

ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.  இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள் ஒலிறத்தொடங்கியுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது 

6 வருடங்களாக தமிழ்நாட்டில் சுற்றித் திரிந்த இலங்கையர்

தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித் திரிந்த இலங்கை வாசியை பொலிஸார் கைது செய்துள்ளனர். காரைக்கால் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

பொதுமன்னிப்பு சர்ச்சை: ஜனாதிபதி கருத்து

குற்றங்கள் மற்றும் ஊழலைத் தடுக்க வேண்டிய முக்கிய அரசுத் துறைகளில் உள்ள சில அதிகாரிகளே இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமீபத்திய ஜனாதிபதி மன்னிப்பு ஊழல் குறித்துப் பேசுகையில் கூறினார். 

மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை அவசரப்படுத்தவும்

வடக்கில், தென்னிந்திய மீனவர்களின் அத்துமீறல், மீன் வளத்தை அள்ளிச் செல்வது, வடக்கு மீனவர்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். தற்போது, கிழக்கு மீனவர்கள் மீதான அட்டூழியங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என்பது அண்மையில் நடைபெற்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது புரிகிறது.

யாழ்ப்பாணம் பொது நூலகம்: டிஜிட்டல் மயமாக்கல் செயல் திட்டம் விரைவில்

நூலக நிறுவனமும் யாழ்ப்பாணம் பொது நூலகமும் இணைந்து  டிஜிட்டல் மயமாக்கல் செயல்திட்டத்தை எதிர்காலத்தில் இணைந்து செயல்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் முன்னாயத்த கலந்துரையாடல் சனிக்கிழமை( 07) அன்று  நடைபெற்றது.

மன்னார்: சிந்துஜா,வேனுஜாவின் மரணத்திற்கு நீதி கோரிய மூவர் கைது

மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மகப்பேற்று சிகிச்சைகளின் போது மரணமடைந்த சிந்துஜா மற்றும் பட்டி தோட்டத்தை சேர்ந்த வேணுஜா மற்றும் அவரின் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் சார்பாக முன்னின்று போராடியவர்கள் மூவர் மன்னார் பொலிஸாரால்   ஞாயிற்றுக்கிழமை(8) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்திய பெண் கைது

கைது செய்ய வந்த பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டுக்காக அழகு நிலைய ஊழியரான 24 வயதுடைய பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக வதுரம்ப பொலிஸார் தெரிவித்தனர்.