உணவு உலகில் புதிய டிரெண்டாகும் ’ஊபே’

லட்டே (Lattes) மற்றும் கேக்குகள் முதல் ஐஸ்கிரீம் வரை, ‘ஊபே’ (Ube) அதன் துடிப்பான ஊதா நிறத்தால் அனைவரையும் கவர்ந்து வருகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டுச் சர்க்கரைவள்ளிக் கிழங்கான இது, ‘மட்சா’ (Matcha) தேநீருக்கு அடுத்தபடியாகப் பெரும் உணவுப் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த எதிர்பார்ப்பின் பின்னணியில் சில எதிர்மறையான பக்கங்களும் உள்ளன.

ஹட்டன் – கொழும்பு பிரதான கடும் பனிமூட்டம்; சாரதிகள் அவதானம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, அவ்வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பனிமூட்டம் காரணமாக வீதியின் பார்வைத்திறன் (Visibility) மிகக் குறைவாகக் காணப்படுவதால், விபத்துகளைத் தவிர்க்கப் பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

  • வாகனத்தின் முகப்பு விளக்குகளை (Low beam) ஒளிரவிட்டுச் செல்லுங்கள்.
  • வாகனத்தின் வேகத்தைக் குறைத்து, முன்னால் செல்லும் வாகனத்திற்கும் உங்கள் வாகனத்திற்கும் இடையே போதிய இடைவெளியைப் பேணுங்கள்.
  • வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மூடுபனி விளக்குகளை (Fog lights) பயன்படுத்துங்கள்.
  • தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதுடன், பயணத்தின் போது கூடுதல் கவனத்துடன் வாகனத்தைச் செலுத்துங்கள்.

ஷியாமாவின் கொலையாளி காதலன் கள்ளக் காதலியுடன் சிக்கியது எப்படி

அம்பாறை வைத்தியசாலையின் இயன்முறை மருத்துவர் (Physiotherapist) ஷியாமா தர்ஷனி என்பவரைக் கொலை செய்த பிரதான சந்தேகநபர், தனது கள்ளக்காதலி மற்றும் நான்கு வயது குழந்தையுடனும் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, யாழ்ப்பாணத்தில் வைத்து புதன்கிழமை (24) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருளுடன் 5 இலங்கையர்கள் கைது

சுமார் 72.2 மில்லியன் (ஏழு கோடியே இருபத்தி இரண்டு லட்சம்) ரூபாய் பெறுமதியான ‘ஹஷீஷ்’ (Hashish) மற்றும் ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்தி வந்த 5 இலங்கை பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (28) அன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாய்களை ஏவி பொலிஸாரைக் கடிக்கச் செய்த பெண்

சட்டவிரோத மதுபான விற்பனையாளர் ஒருவரின் வீட்டை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது, அந்த நபரின் மனைவி நாய்களை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அங்கும்புருவத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

பெண் பிசியோதெரபிஸ்ட் கொலை: பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

குண்டசாலை பொலிஸ் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி, நுவரெலியாவிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழுவொன்றினால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கடந்த 16ஆம் திகதி நுவரெலியாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து, அம்பாறை வைத்தியசாலையின் பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) ஒருவரைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் ஆகியோரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களுக்கு அமைய, இந்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

நிலநடுக்க இடிபாடுகளில் 32 மணிநேரம் சிக்கியிருந்த 18 நாள் குழந்தை மீட்பு

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 18 நாட்கள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று, அற்புதமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

FIFA 2026: சுற்று 32-க்கான அட்டவணையும் இறுதிப் போட்டிக்கான பயணமும்

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள், வரலாற்றிலேயே முதன்முறையாக 48 நாடுகளைக் கொண்டு நடைபெறுகிறது. இந்த ஒரு மாற்றம், அணிகள் நாக்-அவுட் (Knockout) சுற்றை எவ்வாறு அடைகின்றன என்பதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘பொலிஸ் மா அதிபரிடம் சொல்லுங்கள்’

பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையில், பொதுமக்களின் முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பொலிஸ் மா அதிபரிடம் சொல்லுங்கள்’ (Tell IGP) செயற்றிட்டம் குறித்துப் பொதுமக்கள் அறிந்துகொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கோரியுள்ளது. 

யாழ்ப்பல்கலைக்கழக கலைப்பீடத்தில் எழுந்துள்ள பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டின் பின்னணியும் உண்மைகளும்!

பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியரை பாதுகாக்க அறம் தவறிய வழிகளை நாடும் அவரது மனைவியின் மனச்சாட்சியற்ற வெட்ககேடான செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் குறித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பேராசிரியர் தன்னிடம் படித்த மாணவியோடு நடத்திய தொழில் நெறிமுறையின் எல்லை தாண்டிய உரையாடல்கள் சமூக ஊடகங்களில் கசிய வந்திருந்தன.