தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் பெளத்த சமயத்தை அவமரியாதைக்கு உற்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று கூறி திருகோணமலை நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்பாக மூன்று பேர் வீதியில் அமர்ந்து திங்கட்கிழமை(2) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 2 ஊழல் வழக்குகளில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. டாக்காவில் உள்ள பூர்பாச்சல் நியூ டவுன் அரசுத் திட்டத்தின் கீழ் மனைகள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய இறக்குமதிக்கான வரியை குறைத்தார் ட்ரம்ப்
இந்திய பட்ஜெட்டில் இலங்கைக்கு நிதியுதவி
2026 பட்ஜெட் மூலம் இலங்கைக்கு மொத்தம் 4 பில்லியன் இந்திய ரூபாய் உதவியை இந்திய அரசு முன்மொழிந்துள்ளது.
இந்தியாவின் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) காலை 11 மணிக்கு சமர்ப்பித்து உரையாற்றினார். இதன் மூலம் தொடர்ச்சியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
உ க்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்யா இணக்கம்
மியான்மர் தேர்தல்: இராணுவ ஆதரவு கட்சி வெற்றி
மியான்மரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், இராணுவ ஆதரவு பெற்ற யூனியன் மற்றும் ஒற்றுமை கட்சி பெரும்பான்மை வெற்றியை பெற்றிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மியான்மரில் தற்போது இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இராணுவ ஆட்சியின் தலைவராக மின் ஆங் ஹ்லைங் உள்ளார். 2020 பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இராணுவ ஆட்சியால் அவை ரத்து செய்யப்பட்டன.
தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம்
தேங்காய் எண்ணெய்க்கு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் புதிய வரி விதிக்கப்படுவதால், சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிக்கும். அதனால், தீங்கு விளைவிக்கும் பண்ணை எண்ணெய் மற்றும் பிற வகை எண்ணெய்கள் சந்தையில் பொதுவானதாக மாறக்கூடும் என்றும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய பிரச்சாரம் எச்சரிக்கிறது.
PTA, PSTA எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறக்கோரி நீதி அமைச்சிற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் வௌ்ளிக்கிழமை (30) அன்று முன்னெடுக்கப்பட்டது.
