அதன்படி, தூதரகத்தின் புதிய அலுவலகம் கொழும்பு 07, ஸ்ரீமத் ஆர். ஜி. சேனநாயக்க மாவத்தையில் (Srimath R. G. Senanayake Mawatha) அமையவுள்ளது.
இந்த இடமாற்றமானது, இலங்கை மற்றும் மாலைதீவு அரசாங்கங்களுடனும், பொதுமக்களுடனும் கொண்டுள்ள உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான கனடாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும், வரும் 2026 ஜூன் 24ஆம் திகதி முதல் தங்களது அனைத்து சந்திப்புகள் (Appointments) மற்றும் கடிதப் பரிமாற்றங்களை (Correspondence) புதிய முகவரிக்கு இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புதிய முகவரி: இலக்கம் 6, ஸ்ரீமத் ஆர். ஜி. சேனநாயக்க மாவத்தை, கொழும்பு 07, இலங்கை.
எமது திட்டங்கள், தொடர்புகள் மற்றும் சேவைகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள, எமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடலாம்: <-block _nghost-ng-c1111695016=””>https://www.international.gc.ca/country-pays/sri_lanka/colombo.aspx?lang=eng