செய்யறிவு யுகத்தில் செம்மொழித் தமிழும் தமிழர்களும்” என்ற கருப்பொருளில் உலகத் தமிழ் ஆய்வுக் கருத்தரங்கு 2026 கனடாவின் ரொறன்ரோ மாநகரில் ஐப்பசி 15 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. உலகத் தமிழ்க் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடை பெறும் இக்கருத்தரங்கின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பாளராக நிமல் விநாயக மூர்த்தி அவர்கள் செயற்படுகின்றார்.
