செய்யறிவு யுகத்தில் செம்மொழித் தமிழும் தமிழர்களும்”

தமிழின் தொன்மையான அறிவு மரபுகளையும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை யும் இணைக்கும் நோக்கில் நடைபெறும் இக்கருத்தரங்கில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அறிஞர்கள் ஆய்வாளர்கள் கல்வியாளர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் பங்கேற்று, தமிழின் எதிர்கால வளர்ச்சி குறித்துப் பல்வேறு தளங்களில் ஆராயவுள்ளனர்.

தமிழர்களின் மெய்யியல், பண்பாடு, வரலாறு, புலம்பெயர் வாழ்வு மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுடன், செயற்கை நுண்ணறிவின் ஊடாகத் தமிழ்மொழியைப் பாதுகாத்து வளர்ப்பதற்கான வாய்ப்புகளும் இக்கருத்தரங்கில் முக்கியத்துவம் பெறவுள்ளன. தமிழின் தொன்மையை நவீன அறிவியலுடன் இணைத்து, உலகளாவிய அறிவுத் தளத்தில் தமிழின் இருப்பை வலுப்படுத்தும் முயற்சியாக இக்கருத்தரங்கு அமைகின்றது.

இக்கருத்தரங்கு தமிழ்மொழி ஆய்வுடன் மட்டும் நின்று விடாமல், தமிழர்களின் மெய்யியல், பண்பாடு, புலம்பெயர் வாழ்வு, வரலாறு, உலகமயமாக்கல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சி ஆகிய துறைகளையும் ஆராய்வதற்கான அனைத் துலகத் தளமாக அமைகின்றது.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்றுகூடி, தமிழின் தொன்மையையும் எதிர் கால வாய்ப்புகளையும் விவாதிக்கவுள்ளனர். குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் இளைய தலைமுறையினரிடம் தமிழைக் கொண்டு செல்லவும், கல்வி, ஆய்வு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தமிழ் பயன்பாட்டை விரிவுபடுத்தவும் இத்தகைய கருத்தரங்குகள் உதவக்கூடும்.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் மொழி என்பது வெறுமனே தொடர்பாடலுக்கான கருவியல்ல. அது எமது இன அடையாளத்தின் உயிர்நாடியாகும். எனவே, தமிழுக்கான மின்னணு வளங்களை உருவாக்குதல் இளம் ஆய்வாளர்களை ஊக்குவித்தல் உலகத் தமிழறிஞர்களிடையே ஆய்வுத் தொடர்புகளை வலுப்படுத்துதல் ஆகிய பணிகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ரொறன்ரோவில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் ஆய்வுக் கருத்தரங்கு 2026, தமிழின் கடந்தகாலப் பெருமையையும் எதிர்காலச் சாத்தியங்களையும் இணைக் கும் முக்கியமான அறிவியல் முயற்சியாக அமையட்டும்.
தொன்மை எமது வேர்! தொழில் நுட்பம் புதிய சிறகுகள்! இந்த இரண்டையும் இணைத்துக் கொண்டு தமிழ் உலக அரங்கில் உயர்ந்து பறக்க வேண்டும். அந்த உயரிய இலக்கை நோக்கிய அறிவியல் உரையாடலுக்கான வாய்ப்பாக ரொறன்ரோவில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் ஆய்வுக் கருத்தரங்கு 2026 அமை யட்டும்! அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்போம்! வாரீர்! -eelanadu

Leave a Reply