சமாதானத்திற்கான நோபல் பரிசு

தென் ஆபிரிக்காவிற்கு பிரித்தானியாவின் காலனி ஆதிக்க காலத்தில் இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து தோட்ட வேலைகளுக்காக அழைத்து செல்லப்பட்டவர்களின் வழி வந்தவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர் நவநீதம் பிள்ளை.

சுதந்திரப் போராட்ட தியாகி சுப்ரமணிய சிவா அவர்களின் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டை பூர்வீகமாகக் கொண்டவருக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்கு என்பதாக தமிழ் நாட்டுத் தமிழர்கள் இந்த வருட நோபல் பரிசை கொண்டாடுகின்றனர்.
வெள்ளையின மேலாதிக்கம் இருந்த நிறவெறி ஆட்சியிற் காலத்தில் முதல் வெள்ளையினத்தவர் அல்லாதவர் என்றாக தனது வழக்கிற்ஞர் பட்டப்படிப்பை தென் ஆபிரிக்காவில் நிறைவு செய்தவர்.

தென் ஆபிரிக்காவின் நிறவெறி மேலாதிகத்திற்கு எதிரான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நடாத்திய போராட்டதிற்காக நெல்சன் மண்டேலா 25 வருடங்களை கடந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

மன்டேலாவின் விடுதலை அவரின் சிறை வாழ்வு உரிமைகளுக்காக நீதி மன்றங்கள் போராடிய வரலாறே இவரை மனித உரமைகள் சாரந்த போராளியாக உலகிற்கு அதிகம் இன் காட்டுவதாக அமைந்தது.

நவநீதம் பிள்ளை (நவி பிள்ளை) ருவாண்டா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் (ICTR) ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகள் உலக நீதித்துறை வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லாகும்.

1994-ல் ருவாண்டாவில் நடைபெற்ற கொடூரமான இனப்படுகொலை தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ.நா. பொதுச்சபையால் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் 1995 முதல் 2003 வரை ருவாண்டா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் (ICTR) நீதிபதியாகப் பணியாற்றினார். இதில் 1999 முதல் 2003 வரை நான்கு ஆண்டுகள் தலைமை நீதிபதியாகவும் (தலைவர்) பொறுப்பு வகித்தார்.

அப்போது அவர் வழங்கிய தீர்ப்புகளிலேயே மிகவும் முக்கியமானது, போர்க் காலங்களில் நடத்தப்படும் கற்பழிப்புகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை வெறும் தனிப்பட்ட குற்றமாகப் பார்க்காமல், அவற்றை “இனப்படுகொலையின் ஒரு பகுதி” (An element of Genocide) என அறிவித்ததாகும்.

இதுவே சர்வதேச சட்ட வரலாற்றில் பாலியல் வன்முறையை இன அழிப்புக்கான ஆயுதமாக அங்கீகரித்த முதல் தீர்ப்பு இதுவாகும்.
இத் தீர்ப்புத்தான் அதன் பின்னரான இனப்படுகொலைகளுக்கான புதிய வரைவிலகங்களை சர்வ தேச சமூகங்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

கூடவே ஊடகங்கள் பற்றி அவரின் தீர்ப்பாக வெறுப்புணர்வைத் தூண்டி, இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்த ருவாண்டா ஊடகங்களுக்கு எதிராகவும் அவர் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஊடகங்களின் சமூகப் பொறுப்பை வலியுறுத்திய தீர்பும் மிக முக்கியமானதாக உணரப்படுகின்றது.

இலங்கையில் நடைபெற்ற ஈழவிடுதலைப் போராட்டத்தின் தொடர்சியாக யுத்தம் முடிவுற்ற பின்பு அது பற்றி ஆய்வு தீர்வு என்றாக நவநீதம் பிள்ளை இலங்கையிற்கு நேரடியாக வருகை தந்து யுத்தம் நடைபெற்ற இடங்களில் ஆய்வு செய்த பின்பு இருதரப்பும் மனித உரிமை மீறல்களில் யுத்த காலத்தில் செய்தார்கள் என்ற கருத்து தமிழர் தரப்பால் அவ்வளவாக இரசிக்கப்பவில்லை.

காரணம் அவர் இரு தரப்பு என்றாக மனித உரிமை மீறலை குறிப்பட்டதற்காக…..?

சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டவர்கள் பற்றி விடயங்கள் கடுமையான விமர்சனம் என்றாக தகுதி அற்றவர்களுக்கு வழங்கியதாக உணரப்பட்டது உண்மை.

அதுவும் கடந்த வருடம் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட வழங்கப்பட்ட வெனிசுலாவின் எதிர்கட்சி அரசியல் தலைவர் மரியா கொரீனா மச்சோடோ (Maria Corina Machado) வெனிசுலா மீதான அமெரிக்காவின் அத்து மீறலாக அந்த நாட்டின் தலைவரை நாட்டிற்குள் புகுந்து கைது செய்தது என்றான விடயம் சம்மந்தமான நிலைப்பாடு பெரும் சர்சைகளை உலக அரங்கில் ஏற்படுத்தியது.

கூடவே தனது நோபல் பரிசுப் பதக்கத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் நேரில் வழங்கிய நிகழ்வு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…. பெரும் நகைப்பிற்கிடமானது…..

மியான்மரில் (பர்மா) மக்களாட்சிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் அகிம்சை வழியில் போராடிய அந்நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவரான ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) 1991-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

இராணுவ ஆட்சிக்கு எதிராக அவர் காட்டிய அசாதாரணமான சிவில் தைரியத்தைப் பாராட்டி நோபல் கமிட்டி அவருக்கு இந்த உயரிய விருதை வழங்கியது. 1989-ல் மியான்மார் இராணுவ அரசு இவரை முதன்முதலில் வீட்டுக்காவலில் வைத்தது. 1991-ல் இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது இவர் வீட்டுக்காவலில் இருந்ததால், இவரால் நேரில் சென்று பரிசைப் பெற முடியவில்லை.

சில வருடங்களின் பின்பு ஆங் சான் சூகி மியான்மரின் நடைமுறைத் தலைவராக (State Counselor) இருந்த காலத்தில் (2016-2021), அந்நாட்டின் ரக்கைன் (Rakhine) மாநிலத்தில் வாழ்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மிகக் கொடூரமான வன்முறைகளும் தாக்குதல்களும் அரங்கேறின.

ஒரு காலத்தில் மனித உரிமைகளின் குறியீடாகப் பார்க்கப்பட்ட ஆங் சான் சூகி, இந்த வன்முறைகளைத் தடுக்கத் தவறியதுடன் இராணுவத்தின் செயல்களை நியாயப்படுத்தியது அவரது சர்வதேசப் புகழைப் பெருமளவில் சேதப்படுத்தியது.

ஆகஸ்ட் 2017-ல், ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்கள் (ARSA) மியான்மர் காவல் நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மியான்மர் இராணுவம் (வுயவஅயனயற) ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மிகப்பெரிய வன்முறை ஒடுக்குமுறையைத் தொடங்கியது.

இராணுவத்தினர் திட்டமிட்டு கிராமங்களை எரித்தல், படுகொலைகள், மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டதாக ஐ.நா மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின.

இந்த வன்முறையை ஐக்கிய நாடுகள் அவை (UN) “இனச் சுத்திகரிப்பின் பாடப்புத்தகம் போன்ற உதாரணம்” (A textbook example of ethnic cleansing) என்று விவரித்தது.

இதன் விளைவாக 7,40,000-க்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் தப்பித்து அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.

மேற் கூறி இரண்டு உதாரணங்களும் சமாதானத்திற்கான நோபல் பரிசை வழங்குவதற்கு தெரிவு செய்தவர்கள் பற்றி பாரிய குறைபாடுகளை எடுத்துரைக்கும் சம்பவங்களாக அமைந்திருக்கின்றன.

85 வயதில் நவநீதம்பிள்ளை சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றிருப்பது ஓரளவிற்கு ஒருவரின் மிக நீண்ட கால் வாழ்வை முழுமையாக ஆய்வு செய்து அவதானித்த முடிவாக நாம் பார்க்க முடியும்.
அந்த வகையில் இத்தெரிவு சரியான தெரிவாக இருக்கும் என்று உணரப்படுவதில் உள்ள நியாயங்கள் நிறையவே உள்ளன.

ஒருவரின் பெரும் பகுதி வாழ் காலத்தை ஆய்வு செய்து அவரின் செயற்பாட்டு மதிபீடுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக நாம் இதனைக் கொள்ள முடியும்.

அவரின் நீதியின் பக்கம் உணமையின் பக்க நின்று வெளிப்படுத்திய கருத்துகள் சிலருக்கு உடனபாடாக இல்லாது இருக்கலாம். ஆனால் இவை அவரின் பக்கச் சார்பற்ற கருத்து நிலையை எடுத்துக் காட்டுவதாக அமையும்.

ஆனால் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பன்முகத் தன்மையை மறுதலித்து தமிழ் பேசும் மக்களுக்குள் நடைபெற்ற கொலைகள் பற்றி ஆழமான பார்வையை அவர் பெற்றிருந்தாரா என்ற கேள்விகளும் எமக்குள் உண்டு.

இதே போல் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அமெரிக்க இஸ்ரேல் பிரச்சனையில் உள்ள மனித உரிமை மீறல் செயற்பாடுகள், பாலஸ்தீன மக்களின் மனித உரிமைகளை முற்றாக மறுதலித்த செயற்பாடுகள் பற்றி எந்த காத்திரமான செயற்பாடுகளைக் கொண்டிராத ஐநா சபையின் அங்கத்துவ ஊழியர் என்றாக நவநீதம்பிள்ளையும் கேள்விகளுக்கு உள்ளாகும் நபராகவே இருக்கின்றார்.

ஐநாவின் மனித உரிமை சபைகள் உண்மையில் அமெரிக்காவின் பார்வையில் மனித உரிமையை பார்க்கும் நிலையிற்கு அப்பால் என்றான ஒரு நிலையில் இல்லை என்பதினால் இந்த சமாதானத்திற்கான நோபல் பரிசுகள் ஒரு அடையாளமாக மட்டுமே பார்க்க முடியும்.

ஆனால் சர்வ தேச சுமூகத்திடம் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் ஒரு தளமாக செயற்படும் அளவிலாவது ஐநாவிற்குள் செயற்படும் நவநீதம்பிள்ளை போன்றவர்களின் செயற்பாடுகள் மகத்தானவைதான்.

நவநீதம்பிள்ளை தமிழர் என்றாக செயற்படுதல் வேண்டும் என்ற குறும் பார்வையிற்கு அப்பால மனித குலம் என்றான பரந்துபட்ட பார்வையை அவர் தனக்குள் கொணடிருந்தார் என்பதை உணர முடிகின்றது
நாம் தமிழராக இருப்பதினால் அவரைத் தமிழராக மட்டும் இதனை கொண்டாடாமல் அதற்கும் அப்பால் பரந்த பார்வையின் ஊடாகப் பார்ப்பதே மிகச் சரியானது ஆகும்.

Leave a Reply