தமிழ் நாடு சட்ட சபை போட்டுக் காட்டிய வெளிச்சம்

அதெப்படி சொல்லி வைத்த மாதிரி இந்த கட்சிக்காரர்கள் யாருக்குமே படிக்கத் தெரியாமல் இருக்கும் ஒருவேளை பார்வை குறைபாடா இருக்குமோ.. எழுத்து தெரியாமல் தவறா படிக்கிறாங்களோ… ஏன்னா தமிழ் படிக்கத் தெரியாமல் இருக்குமான்னு சந்தேகம். இவர்களுக்கு சபையை பார்த்து பயமோ கூச்சமோ இல்லை பேசும் சரளமா நல்லா சத்தமா பேசுறாங்க ஆனால் பேப்பரை பார்த்து படிக்கும் போதுதான் வார்த்தை வரல…அப்ப படிக்கத் தெரியலன்னுதானே அர்த்தம்.. எல்லாருமே கல்லூரி வரை படித்தவர்கள் என சொல்கிறார்கள் ஆனால் ஏன் படிக்கத்தெரியவில்லை என்பதுதான் கேள்வி.. கணக்கும் தெரியல, வரலாறும் தெரியல, தமிழும் தெரியக ஆங்கிலமாவது தெரியுமான்னு தெரியல.. நம்முடைய சட்டசபையில் நடக்கிற கூத்தை நாமே சிரிக்கிறோம். பிற மாநிலத்தவர் சிரிக்க மாட்டார்களா? பிற மாநிலத்தவர்கள் கூட தமிழ் அழகா பேசுறாங்க படிக்கவும் செய்றாங்க .. சட்டசபையில் பிரேமலதா மேடம் கூட சொல்லியிருந்தார்கள் யாருக்கும் தமிழே படிக்கத் தெரியல்லன்னு …அந்த மாதிரிதான் சட்டசபை இருக்கு…நாமதான் இது தமிழ்நாடு.. தமிழ் தமிழ் ன்னு சும்மா கத்திக்கிட்டு இருக்கோம் போல… ஒருத்தன் கனியன் பூங்குன்றனாருன்னு சொல்றதுக்கு பதிலா கானியன் பூங்குன்றனாருன்னு சொல்றாங்க.. கர்ம வீரர் காமராஜர்னு சொல்றதுக்கு பதிலா காம வீரர் காமராஜர்னு சொல்றாங்க.. ஒருத்தருக்கு நானூற்றி பன்னிரெண்டை நாற்பத்தி பன்னிரெண்டுன்னு படிக்கிறார்.. ஒருத்தருக்கு ஒன்பதாயிரத்துக்கும் தொள்ளாயிரத்துக்கும் வித்தியாசம் தெரியல.. இப்படியே போனால் என்னாகுமோ… நாளைக்கு இவர்கள் மற்றவர்களுக்கு எப்படி முன் உதாரணமா இருக்க முடியும்.? பள்ளிக்குழந்தைகளிடம் நீங்க நல்லா படிக்கனும்னு சொன்னா முதல்ல நீங்க நல்லா படிங்கன்னு சொல்வாங்க.. அந்தளவுக்குதான் இவர்கள் இருக்கிறார்கள்.. ஒன்னும் சொல்றதுக்கில்ல போங்க..

Leave a Reply