மகன் தன்னைப் பற்றி பெருமையாக பேட்டியும் கொடுத்து விட்டார். இளைஞர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். பெண்கள் இன்னும் கொண்டாடுகின்றனர்.
என்ன தான் பிரச்சனை?
திமுக மீது வெறுப்பை விதைப்பதன் மூலம் தான் அவர் வெற்றி பெற்றதால் அதையே தொடர்கிறார்.
தேர்தல் பரப்புரை நேரத்திலேயே நாம் அனைவரும் கவனித்த அம்சம் அவரது அளவுக்கதிகமான ஆக்ரோஷமான உடல்மொழி.
தன்னை ஒரு விக்டிமாக சித்தரித்து, அத்தனை வலிகளையும் தாங்கியபடி தான் இருப்பதாக சொன்னதை மக்கள் நம்பிவிட்டதால் இனி அந்த முகமூடியைக் கழற்ற முடியாது என்று நினைக்கிறார்.
மக்களிடம் திமுக பற்றிய கிலி (Paranoia) இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். எம்ஜிஆர் வெற்றி பெற நம்பியார் வேண்டும் என்பதைப் போல தமக்கு திமுக வேண்டும் என்று நினைக்கிறார்.
பத்திரிக்கையாளர் ஷபீர் நேற்று மாலை நியூஸ் 18 தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசும் போது “தவெக ஆட்சியை திமுக கலைத்துவிடும்” என்று தற்குறிகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்த முயன்றார்.
திமுகவைப் பற்றி மக்கள் மத்தியில் வெறுப்பு, பயம், அவநம்பிக்கை, கிலி, ஒவ்வாமையை ஏற்படுத்தி அதை நிலைக்க வைத்தால் (sustain) தான் தம்மால் வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறார்.
மேலும் நடிகர் ஒரு கெட்டுப்போன செல்லப்பிள்ளையாக (spoiled brat) இருப்பதால் சினிமாவில் பெரிய நடிகராக இருந்ததால் தன்னை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி கேட்பது தமது ஊதிப் பெருக்கப்பட்ட ஆண்மைக்கு (inflated masculinity) விடப்பட்ட சவாலாக கருதுகிறார்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் மதிப்பு மற்றும் அவரது நிதானம் ஆகியவை நடிகரைத் தொந்தரவு செய்கின்றன.
திமுக எப்போதும் எப்படியும் தம்மைத் திருப்பி அடிக்கும் என்று நிலைகுலைந்திருக்கிறார்.
உதயநிதியின் பண்பு மிக்க செயல்பாடு நடிகரை சித்ரவதை செய்கிறது.
நான் முதல்வர், இவர் எதிர்கட்சித் தலைவர்; இருந்தும் என்னை விட அவர் உற்சாகமாக இருக்கிறாரே என்று பொருமுகிறார்.
உதயநிதியின் குழந்தை, பிஞ்சு, க்யூட் முகம், பாவனைகள், சிகை, உடல்மொழி நடிகருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
தம்மால் பொய், புரட்டு, பித்தலாட்டம் செய்து தானே இவர்களை வெல்ல முடிந்தது என்ற உண்மையும் நடிகரை வாட்டி வதைக்கிறது.
தம்மைச் சுற்றி அடிமைகளும், தற்குறிகளும், மோசடிப் பேர்வழிகளும் தான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து தாழ்வு மனப்பான்மையில் உழல்கிறார்.
முரட்டுத்தனம், சதி, பொய், வசை மூலம் தான் தமது கட்சியால் திமுகவை முடக்க முடிகிறது என்பதும் அவருக்குத் தெரியும்.
நாம் என்ன தான் வெற்றி பெற்றாலும் குளியலறையில் நிர்வாணமாக நிற்கும் போது நமக்குத் தெரியும் அந்த வெற்றியின் உண்மைத்தன்மை.
அவருக்கு அது சுடுகிறது. கரூரின் ஓலம் காதில் ஒலித்தபடியே இருக்கிறது.
பிறகு எப்படி நாகரிகமாக, அமைதியாக நடந்து கொள்வார்?