அட்டப்பள்ளத்தை அரிக்கும் ஆர்ப்பரிக்கும் ஆழி

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அசாதாரண இயற்கை சூழல் காரணமாக பல இடங்கள் பாரிய கடல் அரிப்புக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக நிந்தவூரை அடுத்துள்ள அட்டப்பள்ளம் எனும் கிராமம் மிகவும் மோசமான கடல் அரிப்புக்கு இலக்காகி வருகிறது .