எபோலாவால் 3,901 பேர் பலி

காங்கோ சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, நாட்டில் இதுவரை எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,067 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 3,901 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நோய்த்தொற்றின் உயிரிழப்பு விகிதம் (CFR) 48.4 சதவீதமாக உள்ளது.

நாட்டின் 7 மாகாணங்களில் உள்ள 63 சுகாதார மண்டலங்களுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் பெரும்பகுதியை உள்ளடக்கியுள்ளது.

இந்த முறை பரவி வரும் தொற்று ‘பண்டிபக்யோ’ (Bundibugyo) வகை எபோலா வைரஸ் ஆகும். இந்த வகை வைரஸ் தொற்றுக்கு எதிராகப் பிரத்யேகமாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது குறிப்பிட்ட மருந்துகளோ இன்னும் முழுமையாக நடைமுறையில் இல்லை.

பாதிப்பின் தீவிரம்: உலகிலேயே மிகவும் கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றான இது, உடலின் உட்புற உறுப்புகளில் கடுமையான ரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது.

தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச சுகாதார அமைப்புகள் தொடர் கண்காணிப்பு மற்றும் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், இந்த பரவல் அண்டை நாடுகளுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் தீவிரமடைந்துள்ளது.

Leave a Reply