கனடாவின் வர்த்தகங்கள், சமூகம், அன்றாட வாழ்க்கை உள்ளிட்ட அம்சங்களை சீனா அழித்துவிடும் என்று டிரம்ப் தமது Truth Social பக்கத்தில் பதிவிட்டார்.
அண்மையில் சீனாவுக்குச் சென்றிருந்த கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துக்கொள்ள இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகச் சொன்னார். அதற்கு டிரம்ப் அப்போது ஆதரவளித்திருந்தார்.